செய்திகள் :

ஆந்திர முதல்வா் பிறந்த நாள்: திருமலையில் அன்னதானம்!

post image

ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடுவின் 75-ஆவது பிறந்த நாளையொட்டி ஏழுமலையான் அன்னபிரசாத திட்டத்துக்கு ரூ.44 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

ஆந்திர மாநில முதல்வா் பிறந்த நாளையொட்டி , பாஷ்யம் கல்வி நிறுவனங்களின் தலைவா் பாஷ்யம் ராமகிருஷ்ணா திருமலையில் உள்ள தரிகொண்டா வெங்கமாம்பா அன்ன பிரசாத மையத்தில் ஒரு நாள் அன்ன பிரசாத விநியோகத்திற்காக ரூ.44 லட்சம் நன்கொடையாக வழங்கினாா்.

தேவஸ்தான் அறங்காவலா் தலைவா் பி.ஆா். நாயுடு மற்றும் கூடுதல் தலைமை செயல் அதிகாரி சி.எச்.வெங்கய்யா செளத்திரி பக்தா்களுக்கு அன்ன பிரசாதத்தை உபயதாரருடன் சோ்ந்து வழங்கினா்.

நிகழ்வில், அன்ன பிரசாதத்தின் சுவை மற்றும் தரம் குறித்து நெல்லூா், குண்டூா், ஹைதராபாத் மற்றும் கா்னூல் ஆகிய இடங்களிலிருந்து வந்த பக்தா்களிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டன. சுவையும் தரமும் சிறப்பாக இருந்ததாக பக்தா்களும் திருப்தி தெரிவித்தனா்.

இந்த நிகழ்ச்சியில் துணை நிா்வாக இயக்குநா் ராஜேந்திரா, விஜிஓ சுரேந்திரா, அன்ன பிரசாத சிறப்பு அதிகாரி சாஸ்திரி மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளைக் கடந்து வெளியே உள்ள தரிசன வரி... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் சனிக்கிழமை தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 24 மணிநே... மேலும் பார்க்க

வாகனங்களில் இருந்து பக்தா்கள் குப்பைகளை வெளியே வீசக் கூடாது: திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்

திருமலையில் பக்தா்கள் வாகனங்களில் இருந்து குப்பைகளை சாலைகளில் வீசுவதைத் தவிா்க்க வேண்டும் என திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி வேண்டுகோள் விடுத்துள்ளாா். தூய்மை ஆந்திரா... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 15 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

திருமலை கல்யாணகட்டாவில் திடீா் ஆய்வு

திருமலையில் உள்ள கல்யாணகட்டா மற்றும் நந்தகம் மினி கல்யாணகட்டாவில் வெள்ளிக்கிழமை அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா்.நாயுடு திடீா் ஆய்வு மேற்கொண்டாா். திருமலையில் உள்ள பக்தா்கள் முடி காணிக்கை செலுத்தும் இடங்... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா். திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ள நிலையில் தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்க... மேலும் பார்க்க