தனியாா் ஹஜ் பயண கட்டணம் பல லட்சம் உயா்வு! வெளிப்படை தன்மை ஏற்படுத்த வலியுறுத்தல...
MI vs CSK : 'வான்கடேவில் சென்னை வெல்ல கவனிக்க வேண்டிய 3 விஷயங்கள்!' - என்னென்ன தெரியுமா?
'மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்!"
மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி வான்கடே மைதானத்தில் நடக்கவிருக்கிறது. சென்னை அணி இதுவரை 7 போட்டிகளில் ஆடி 2 போட்டிகளில் மட்டுமே வென்றிருக்கிறது.

ப்ளே ஆப்ஸ் வாய்ப்பில் நீடிக்க சென்னை அணி இந்தப் போட்டியை வென்றே ஆக வேண்டும். இப்படியொரு நிலையில் வான்கடேவில் நடக்கும் இந்தப் போட்டியில் சென்னை அணி என்னென்ன விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்?
பிட்ச் கணிப்பு :
வான்கடேவின் பிட்ச் எப்போதுமே பேட்டிங்கிற்கு உகந்ததாகவே இருக்கும். ஆனால், கடந்தப் போட்டியில் ஒரு சர்ப்ரைஸ் இருந்தது. வான்கடேவில் சன்ரைசர்ஸூக்கு எதிராக கடந்த போட்டியை மும்பை ஆடியிருந்தது. சன்ரைசர்ஸ் பேட்டிங்கில் வலுவான அணி. அதிரடி வீரர்கள் நிறைய பேர் இருந்தார்கள்.
முந்தைய போட்டியில்தான் 240+ டார்கெட்டை சேஸ் செய்துவிட்டு வந்தார்கள். அதனாலயே சன்ரைசர்ஸூக்கு எதிராக பிட்ச்சை மாற்றினர். பௌலர்களுக்கு சாதகமான வகையில் பந்து நின்று வரும் வகையிலான மெதுவான பிட்ச்சை அமைத்திருந்தனர். இதில்தான் சன்ரைசர்ஸ் அணி திணறிப்போனது.

முதலில் பேட் செய்து 162 ரன்களை மட்டுமே அவர்களால் எடுக்க முடிந்தது. ஆக, இந்தப் போட்டியில் எந்த மாதிரியான பிட்ச்சை கொடுக்கப் போகிறார்கள் என்பதை தோனியும் ப்ளெம்மிங்கும் கணிக்க வேண்டும். எந்த பிட்ச்சாக இருந்தாலும் சிறப்பான செயல்பாட்டை கொடுக்க சென்னை அணி தயாராக இருக்க வேண்டும்.
டாப் ஆர்டர் கலக்குமா?
போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பில் சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெம்மிங் ஒரு முக்கியமான விஷயத்தை பேசியிருந்தார். அதாவது டாப் 3-4 வீரர்கள் மட்டுமே அணியின் 75% ரன்களை அடிக்க வேண்டும். அப்படி அடித்தால் மட்டுமே இந்தத் தொடரில் நீடிக்க முடியும்.

இப்போது புள்ளிப்பட்டியலில் மேலாக இருக்கும் அணிகள் டாப் ஆர்டர் சிறப்பாக செயல்பட்டதால்தான் அந்த இடத்தில் இருக்கின்றன என்றார். ப்ளெம்மிங் சொன்னதை போல சென்னை அணிக்கு டாப் ஆர்டரில் ஒரு நல்ல செயல்பாடு இதுவரைக்கும் கிடைக்கவே இல்லை. ஓப்பனிங்கும் நம்பர் 3 இடத்திலும் நிறைய மாற்றங்கள் நடந்துகொண்டே இருந்தது.

சென்னை அணியின் தொடர் தோல்விகளுக்கு டாப் ஆர்டர் சிறப்பாக செயல்படாததும் மிக முக்கிய காரணம். அப்படியிருக்க இந்தப் போட்டியை வெல்ல சென்னை அணியின் டாப் ஆர்டர் க்ளிக் ஆகிய ஆக வேண்டும்.
மந்தமான மிடில் ஆர்டர்:
கடந்த போட்டியில் இளம் வீரர் ஷேக் ரஷீத் ஓப்பனிங் இறங்கி அடித்து ஆட சென்னைக்கு ஓப்பனிங்கில் கொஞ்சம் மொமண்டம் கிடைத்தது. கடைசி 5 ஓவர்களில் போட்டியை தோனி கையில் எடுத்துக் கொண்டார். சிறப்பாக முடித்துக் கொடுத்தார். ஆனால், மிடில் ஆர்டரில் இன்னும் எந்த நம்பிக்கையும் இல்லை. ஜடேஜாவை ப்ரமோட் செய்து நம்பர் 4 இல் அனுப்பினார்கள்.
ஆனாலும் வேலைக்கு ஆகவில்லை. விஜய் சங்கரால் அதிரடியாக ஆட முடியவில்லை. சிவம் துபே கடந்த 2 சீசன்களிலும் இருந்த டச்சில் இல்லை. இதனால் மிடில் ஓவர்களில் சென்னை அணிக்கு பவுண்டரியே குறைவாகத்தான் வருகிறது. ரன்ரேட் குறைவாகவே இருக்கிறது. இந்த நிலையும் மாற வேண்டும். மிடில் ஆர்டர் வீரர்கள் இன்னும் துடிப்பாக ஆட வேண்டும்.