MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
நின்றுகொண்டிருந்த விமானம் மீது மோதிய வேன்: ஓட்டுநர் காயம்
பெங்களூரு விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இண்டிகோ விமானம் மீது டெம்போ வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் இன்ஜின் பழுதுபார்ப்பதற்காக இண்டிகோ விமானம் வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டிருந்தது.
அப்போது ஊழியர்களை இறக்கிவிடுவதற்காக வந்த டெம்போ வாகனம், விமானத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் டெம்போ வாகனத்தின் மேல் பகுதி சேதமடைந்தது. மேலும் அதன் ஓட்டுநருக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டன. டெம்போ ஓட்டுநரின் அலட்சியத்தால் இந்த விபத்து ஏற்பட்டதாக இண்டிகோவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பலில் சர்ச்சை சுவரொட்டிகள்: போலீஸார் விசாரணை
இவ்விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இண்டிகோ நிறுவனம் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தற்போது இந்த விபத்து தொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.