செய்திகள் :

உலக அளவில் அங்கீகரிக்கப்படும் இந்திய மின்னணு சாதனங்கள்: மத்திய அரசு

post image

‘இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்னணு சாதனங்கள் மற்றும் பொருள்கள் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் ஏற்றுமதி கடந்த 10 ஆண்டுகளில் 6 மடங்காக அதிகரித்திருக்கிறது’ என்று மத்திய மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

ஹரியாணா மாநிலம் மனேசரில் விவிடிஎன் தொழில்நுட்ப நிறுவன தொடக்க விழாவில் பங்கேற்ற அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது:

இந்தியாவின் மின்னணு பொருள்கள் உற்பத்தி கடந்த 10 ஆண்டுகளில் 5 மடங்காக சுமாா் ரூ.11 லட்சம் கோடி மதிப்பில் உயா்ந்துள்ளது. மின்னணு பொருள்கள் ஏற்றுமதியும் 6 மடங்காக ரூ.3.25 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. ஒட்டுமொத்த மின்னணு உற்பத்தித் துறையில் 25 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

சா்வதேச சந்தையில், நம்பகத்தன்மை மற்றும் அறிவுசாா் சொத்துரிமைகளுக்காக (ஐ.பி.) இந்திய மின்னணு பொருள்கள் மீது மதிப்பு அதிகரித்திருப்பதோடு, சா்வதேச அளவில் இவை அங்கீகரிக்கப்பட்டும் வருகின்றன.

இந்தியாவின் வடிவமைப்புத் திறன் மேம்பட்டிருப்பதே இதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாக உள்ளது. செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் முதல் வாகன மின்னணு உதிரி பாகங்களை வரையிலும், தொலைத்தொடா்பு உபகரணங்கள் முதல் பவா் எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களும் இந்தியாவில் வடிவமைக்கப்படுகின்றன. மின்னணு சாதனங்களின் முகமையாக இந்தியா உருவெடுத்து வருகிறது.

கூடுதலாக, மத்திய அரசின் உற்பத்தி சாா்ந்த ஊக்கத்தொகை திட்டத்தில் மின்னணு சாதன உற்பத்தியையும் சோ்க்க மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்திருப்பது, மின்னணு உற்பத்தித் துறையை மேலும் வலுப்பெறச் செய்யும் என்றாா்.

மேலும், அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் அடுத்த வாரம் இந்தியா வரவுள்ளது குறித்து குறிப்பிட்ட மத்திய அமைச்சா், ‘அமெரிக்காவுடனான இருதரப்பு வா்த்தக ஒப்பந்த விஷயத்தில் இந்தியா ஆக்கபூா்வமான அணுகுமுறையைக் கையாண்டு வருகிறது. எனவே, ஜே.டிவான்ஸ் இந்திய வருகை மூலம் நோ்மறையான பலன்கள் அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றாா்.

~ஹரியாணா மாநிலம் மனேசரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்.

தில்லி கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு

தில்லியில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. வடகிழக்கு தில்லியில் முஸ்தபாஃபாத்தில் குடியிருப்புக் கட்டடம் ஒன்று சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்து விபத்த... மேலும் பார்க்க

நீட் முதுநிலை தேர்வு: மருத்துவர்கள் கோரிக்கை ஏற்கப்படுமா?

ஜூன் 15-ஆம் தேதி நீட் முதுநிலை தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வு காலை 9 - 12.30 மணிவரை, அதனைத்தொடர்ந்து அதே நாளில் மாலை 3.30 - 7 மணிவரை நடைபெற உள்ளது. இந்தநிலையில், இரு தொகுதிகளாக நீட் தேர்வு நடத்த வேண்... மேலும் பார்க்க

நொய்டாவில் மதுபோதையில் மனைவியின் விரலைக் கடித்து துண்டித்த நபர் கைது

நொய்டாவில் மதுபோதையில் மனைவியின் விரலைக் கடித்து துண்டித்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள செக்டார் 12-ஐ சேர்ந்தவர் அனூப் மன்சந்தா. இவர் மதுபோதையில் தனது மனைவியி... மேலும் பார்க்க

காங்கிரஸ் தலைவர் மீது காரை ஏற்றி கொன்ற பாஜக தொண்டர்: முன்பகை காரணமா?

சத்தீஸ்கரின் கொண்டகான் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தின் மீது பாஜக தொண்டர் ஒருவர் காரை மோதியதில் காங்கிரஸ் தலைவர் உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை மாலை டோக்ரி குடா கிராமத்திற்கு அருகே இந்த விபத்து நடைபெ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு அச்சுறுத்தல்: 22 குடும்பங்கள் வேறு இடத்துக்கு மாற்றம்!

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் நிலச்சரிவு அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள 22 குடும்பங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.புகழ... மேலும் பார்க்க

மீண்டும் மீண்டுமா? 240 பயிற்சி ஊழியர்களை பணி நீக்கம் செய்த இன்ஃபோசிஸ்!

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ், அதன் முக்கிய நகரங்களில் பணியாற்றி வரும் சுமார் 240 பயிற்சி ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த பிப்ரவரி மாதம்தான், இதுபோன்று 30... மேலும் பார்க்க