எல் கிளாசிக்கோ உறுதி: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பார்சிலோனா!
சென்னையில் ஒரு நாள்! - குறுங்கதை | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்.
அன்று…
எங்கும் பட்டுத்தெரித்திடும் மழைத்தூரல், மிதமாய் வீசிடும் காற்றுடன், மழைச்சாரலின் ஊடே மங்கலாய்த் தெரிந்த டீக்கடை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் கனமழை எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருந்தார்.
சொன்னதுதான் சொன்னாலே! மழையின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது. பலகட்டத்தில், நாம் அலைபேசியில் சொடக்கி விட்டதும், ஓடிவரும் ஆட்டோக்கள், டேக்ஸிக்கள் மறைந்துவிட, அரசு பேருந்துகள் மட்டும் சிறிய இடைவெளியில் இயங்கிக் கொண்டிருந்தன.

பேருந்து நிலையத்தில், பேருந்திற்காக காத்துக்கொண்டிருந்தாள் ஒரு இளம் பெண், அலுவலகம் முடிந்து வீட்டிற்குச் சென்று விட. மிகையான ஆள்களை ஏற்றிக்கொண்டு, கனமான பேருந்து, ஒரு பக்கம் சாய்வாக வந்துகொண்டிருந்தது. வேறு வழியின்றி, முண்டியடித்துக்கொண்டு ஏறுவதற்குள் திக்குமுக்காடி போய்விட்டாள்.
பயணச்சீட்டு வாங்க பணத்தை எடுத்தாள். ஆனால், அது மழையில் நனைந்து ஓரத்தில் கிழிந்துவிட்டது. (இலவச பேருந்து வசதி அறிமுகமாகாத காலம் போலும்!)
செய்வதறியாது பதறிப்போன அவளை கவனித்துக்கொண்டிருந்த ஓர் இளைஞன், “என்ன ஆனது?” என்று கேட்டான்.
தன்னிடமுள்ள கிழிந்த பணத்தைக் காண்பித்து, தன் நிலையைக் கூறி “நான் கோயம்பேடு வரைக்கும் செல்ல வேண்டும்,” என்று கூறினாள். அவனோ, “நான் ஊருக்கு புதிது. புதிய பாதையில் பயணிப்பதால், கூட்டத்தில் சரியாக விசாரிக்க முடியாமல் கடைசி நிறுத்தம் வரை பயணச்சீட்டு வாங்கிவிட்டேன். நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்க வேண்டியவன். இந்தாங்க, என் பயணச்சீட்டை வச்சுக்கோங்க,” என்று தந்துவிட்டு இறங்கினான்.
அவன் நல்லநேரம் இவன் தாராள மனதை நடத்துநர் கவனிக்கவில்லை; டிக்கெட் பரிசோதகரிடமும் அன்று சிக்கவில்லை.
நிம்மதிப் பெருமூச்சுடன் கோயம்பேட்டில் இறங்கிய அவள், கோபத்தில் தனக்குத் தக்க சமயம் உதவாத நனைந்த கிழிந்த ரூபாய் நோட்டை சாலையில் வீசிவிட்டுச் சென்றாள். சாலையோரத்தில் கிடந்த ரூபாய் நோட்டை எடுத்த பிச்சைக்காரன், மழை நின்றதும், காயவைத்து ஓரத்தை ஒட்டவைத்து சரி செய்தான், பயன்படுமென.

அது அவனுக்கு ஒரு வேலை, இரவு உணவு வாங்க வழிச் செய்தது. மிகையாய் இருந்த உணவை உண்ண முடியாமல், மீதியை அதே ரோட்டோரம் போட்டுவிட்டுச் சென்றான்.
மிச்சஉணவைக் கண்ட குட்டி நாய்க்கு வாயெல்லாம் உமிழ்நீர் சுரக்க, வாலை ஆட்டிக்கொண்டு சாப்பிட்டுச் சென்றது. குட்டி நாய் சிதறிய சொச்சத்தை எறும்புக்கூட்டம் முந்திக்கொண்டு தின்றது.
நமக்கு தேவைப்படாத விஷயம் மட்டுமல்ல, நம் தேவைக்கு மிகையான எதுவுமே ஏதோ ஒரு வழியில் அடுத்தவரைச் சென்றடைய வேண்டியது . எனவே, நாம் தேவைக்கு மிஞ்சிக் கொள்வதும் வேண்டாம், வீணடிக்கவும் வேண்டாம்.
நீதி - 2008-ல் எப்படி கடுகு டப்பாவில் சேர்த்து வைக்கப்பட்ட சிறு பணம் பெரிய பொருளாதார நெருக்கடியில் உதவியதோ, அதேபோல் சிறு விஷயங்கள் , சின்னஞ்சிறு மாற்றங்களே பெரிய அறுவடைக்கான விதை தான்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.