செய்திகள் :

சென்னையில் கார்ல் மார்க்ஸ் சிலை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

post image

சென்னையில் கார்ல் மார்க்ஸுக்கு உருவச் சிலை அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்று கொண்டிருக்கும் அகில இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாநாட்டில் இன்று முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ளவுள்ள நிலையில், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

”உலக மாமேதை கார்ல் மார்க்ஸை பெருமைப்படுத்திட திமுக அரசு விரும்புகிறது. உலக தொழிலாளர்களே ஒன்றுகூடுங்கள் என்ற பிரகடனத்தை வடிவமைத்தவர் கார்ல் மார்க்ஸ். வரலாற்றை மாற்றியமைத்த சிலரில் தலைமகனாகப் போற்றப்படுபவர் கார்ல் மார்க்ஸ்.

அவரது நினைவு நாளான மார்ச் 14 ஆம் நாள் தமிழக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தோம். இந்தியா ஒரு காலத்தில் மறுமலர்ச்சி அடையும் என்று உறுதியாக எதிர்பார்க்கலாம் என எழுதியவர் மார்க்ஸ்.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மார்க்ஸின் சிலை நிறுவப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டாவது அறிவிப்பாக அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் தலைவரும் உறங்கா புலி எனப் போற்றப்பட்டவருமான மூக்கையா தேவருக்கு நாளை 103 ஆவது பிறந்த நாள்.

மதுரை உசுலம்பட்டியில் பிறந்த அவர், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நம்பிக்கை பெற்று ஃபார்வர்ட் பிளாக் கட்சியில் இணைந்தார். உசுலம்பட்டியில் பலமுறை தேர்தலில் நின்று வெற்றி பெற்று மக்கள் நாயகனாக திகழ்ந்தவர்.

அவருக்கு உசுலம்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க : வக்ஃப் மசோதாவுக்கு எதிராக வழக்கு: கருப்பு பட்டை அணிந்து முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

கச்சத்தீவை மீட்க உடனடி நடவடிக்கை தேவை: பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

கச்சத்தீவை மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து, பிரதமருக்கு அவா் வியாழக்கிழமை எழுதிய கடிதம்: பாக். வளைக... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு: முதல்வா் ஸ்டாலின்

வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக சாா்பில் வழக்கு தொடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நி... மேலும் பார்க்க

மத்திய அரசால் அதிகம் பாதிப்படைவது நானும், பினராயி விஜயனும்தான்! - முதல்வர் ஸ்டாலின்

பாஜகவால் அதிகம் பாதிப்படைவது நானும், பினராயி விஜயனும்தான் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை!

உத்தரகோசமங்கைகோயில் குடமுழுக்கையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்துக்கு நாளை(ஏப். 4) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களநாயகி அம்மன் கோயில் குடமுழுக்கு நாளை(ஏப். 4) நடைப... மேலும் பார்க்க

தர்பூசணி வாங்கலாமா? கூடாதா? வெடித்தது சர்ச்சை

தர்பூசணி தொடர்பான சர்ச்சை இன்று பேசுபொருளாகியிருக்கிறது. ஒருபக்கம் உணவுத் துறை அதிகாரிகளின் தகவலால் தர்பூசணி விற்பனை குறைந்ததாக விவசாயிகளும் வியாபாரிகளும் போராட்டத்தில் ஈடுபட, ரசாயன தர்பூசணி குறித்து ... மேலும் பார்க்க

பாஜகவின் மோசமான ஆதிக்க அரசியல்: வக்ஃபு விவகாரத்தில் விஜய் கண்டனம்!

ஜனநாயகத்திற்கு எதிரான வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.வக்ஃபு விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் தெரிவித்திருப... மேலும் பார்க்க