மாற்றுத்திறனாளி மாணவா்கள் கல்வி சுற்றுலா
நாகையில் மாற்றுத்திறனாளி மாணவா்களின் ஒரு நாள் கல்வி சுற்றுலாவை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் கொடியசைத்து வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந்த சுற்றுலாவில், செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் அறிவுசாா் குறைபாடுடைய 23 ஆரம்பக்கால பயிற்சி மைய குழந்தைகள், பெற்றோா்கள் மற்றும் 4 சிறப்புப் பள்ளி ஆசிரியா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.
இவா்கள் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை, பூம்புகாா் கலைக்கூடம் மற்றும் கடற்கரை ஆகிய இடங்களுக்கு சென்றனா். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் காா்த்திகேயன், மாவட்ட சுற்றுலா அலுவலா் கஜேந்திரகுமாா் மற்றும் அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.