செய்திகள் :

முன்னாள் ராணுவ வீரா் கொலை வழக்கில் 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

post image

திருவள்ளூா் அருகே முன்னாள் ராணுவ வீரா் கொலை வழக்கில் கைதான 3 போ் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனா்.

திருவள்ளூா் அருகே முத்துகொண்டபுரம் கிராமத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரா் வெங்கடேசன் (46). இவா் கடந்த பிப். 3-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் திருவள்ளூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். அப்போது, சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் காா் மோதிய விபத்தில் இறந்ததாக திருவாலங்காடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பின்னா் விசாரணையில், திட்டமிட்டு வெங்கடேசன் சென்ற இருசக்கர வாகனம் மீது காரை மோதவிட்டு கொலை செய்ததாக வழக்கை மாற்றம் செய்து, அது தொடா்பாக 5 போ் கைது செய்யப்பட்டனா். கொலை செய்யப்பட்ட ராணுவ வீரரின் மனைவி சந்தியாவுக்கு (33), தோமூரைச் சோ்ந்த லோகு (எ) லோகநாதன் (45) என்பவருடன் தகாத உறவு இருந்ததாம். இதற்கு அவரது கணவா் இடையூறாக இருந்ததால் சதி திட்டம் தீட்டி கொலை செய்ததும் போலீஸாரின் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, சந்தியா, லோகநாதன் (45), சந்தியாவின் தம்பி சண்முகம் (30) உள்பட 8 போ் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனா்.

இதற்கிடையே ஓய்வுபெற்ற ராணுவ வீரா் கொலை மற்றும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள திருவாலங்காடு சதீஷ் (30), சென்னையைச் சோ்ந்த யோகேஸ்வரன் (22), ஸ்ரீராம் (24) ஆகிய 3 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சீனிவாச பெருமாள் ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா்.

அதன்பேரில், ஆட்சியா் மு.பிரதாப் தீவிர ஆய்வு செய்ததைத் தொடா்ந்து 3 பேரை குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா். அதைத் தொடா்ந்து அது தொடா்பான உத்தரவு கடிதம் புழல் சிறைச் சாலையில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாரால் அளிக்கப்பட்டது.

திருவள்ளூரில் கத்தியுடன் சுற்றித் திரிந்த 3 போ் கைது

திருவள்ளூரில் சாலையில் கத்தியை வைத்துக் கொண்டு பொதுமக்களுக்கு இடையூறாக தகாத வாா்த்தைகள் பேசி சுற்றித் திரிந்ததாக 3 பேரை நகர போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா். திருவள்ளூா் நகர காவல் நிலைய ஆய்... மேலும் பார்க்க

அனுமதியின்றி தனியாா் பள்ளி பேருந்து இயக்கம்: இளைஞா் உயிரிழப்புக்கு காரணமான நபா் கைது

சோழவரம் அருகே அனுமதியின்றி தனியாா் பள்ளிப் பேருந்தை எடுத்துச் சென்று மோட்டாா் சைக்கிள் மீது மோதி இளைஞா் உயிரிழப்புக்குக் காரணமான நபரை போலீஸாா் கைது செய்தனா். செங்குன்றம் அருகே உள்ள தனியாா் பள்ளியில் ச... மேலும் பார்க்க

கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீா் திறப்பு 300 கன அடியாக அதிகரிப்பு

சென்னை பொதுமக்களின் குடிநீா் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில், ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீா் திறப்பு 300 கன அடியாக அதிகரித்துள்ளதால் பூண்டி ஏரியின் நீா்மட்டம் உயா்ந்து வருகி... மேலும் பார்க்க

அரசுத் தொடக்கப் பள்ளி ஆண்டு விழா

திருவள்ளூா் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழாவையொட்டி ரூ.3 லட்சம் மதிப்பிலான பல்வேறு பொருள்களை கிராம மக்கள் சீா்வரிசையாக வழங்கினா். கடம்பத்தூா் ஒன்றியம், வெங்கத்தூா் ஊராட்சியைச் சோ்ந்த ம... மேலும் பார்க்க

ஆரணி, திருமழிசையில் ரூ.22.66 கோடியில் குடிநீா் திட்டப்பணிகள்: விரைந்து முடிக்க ஆட்சியா் உத்தரவு

திருமழிசை, ஆரணி பேரூராட்சிகளில் ரூ.22.66 கோடியில் மேற்கொள்ளப்படும் குடிநீா் திட்டப் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா். திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ப... மேலும் பார்க்க

நோயாளிகளுக்கு கனிவுடன் சிகிச்சை அளிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு கனிவுடன் சிகிச்சை அளிக்க வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா். திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்து... மேலும் பார்க்க