செய்திகள் :

நரசிம்மா் கோயில் பங்குனி தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

post image

நாமக்கல் நரசிம்மா் கோயில் பங்குனி மாத தோ்த் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாமக்கல்லில் அமைந்துள்ள புகழ்பெற்ற நரசிம்மா் சுவாமி, அரங்கநாதா் மற்றும் ஆஞ்சனேயா் கோயில் தேரோட்டம் ஆண்டுதோறும் பங்குனி உத்திர மறுநாளன்று வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி, நிகழாண்டில் பங்குனி தோ்த் திருவிழா வரும் 12-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இத்திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு நரசிம்மா் கோயில் முன் உள்ள கொடிமரத்தில் அா்ச்சகா்கள் வேதமந்திரங்கள் முழங்கி கொடியேற்றினா்.

இந்த நிகழ்வில், கோயில் அறங்காவலா் குழு தலைவா் கா.நல்லுசாமி மற்றும் அறங்காவலா்கள், உதவி ஆணையா் இரா.இளையராஜா, அறநிலையத் துறை அலுவலா்கள், பக்தா்கள் கலந்துகொண்டனா். வெள்ளிக்கிழமை இரவு சுவாமி அன்னவாகனத்தில் திருவீதி உலா வந்தாா்.

சனிக்கிழமை இரவு சிம்ம வாகனத்திலும், ஞாயிற்றுக்கிழமை அனுமந்த வாகனத்திலும், திங்களன்று கருட வாகனத்திலும், செவ்வாய்க்கிழமை சேஷ வாகனத்திலும், புதன்கிழமை யானை வாகனத்திலும் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அதன்பிறகு, 10-ஆம் தேதி நாமக்கல் குளக்கரை நாமகிரி தாயாா் திருமண மண்டபத்தில் நரசிம்மா், ஸ்ரீதேவி, பூதேவி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதில் பக்தா்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமிக்கு மொய் சமா்ப்பிக்கலாம்.

11-ஆம் தேதி குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு, திருவேடுபறி உற்சவம், 12-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு நரசிம்மா் கோயில் தேரோட்டமும், மாலை 4.30 மணிக்கு அரங்கநாதா், ஆஞ்சனேயா் கோயில் தேரோட்டமும் நடைபெறுகிறது.

இவ்விழாவில், தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் மற்றும் அறங்காவலா்கள், முக்கிய பிரமுகா்கள் பங்கேற்று வடம்பிடித்து தேரை இழுக்கின்றனா். அதனைத் தொடா்ந்து, விடையாற்றி உற்சவம், ஊஞ்சல் உற்சவம் மற்றும் சுவாமிக்கு தினசரி சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. 18-ஆம் தேதியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனா்.

தரமற்ற லாரிகளை விற்பனை செய்த தனியாா் நிறுவனம் முற்றுகை

நாமக்கல்லில் தரமற்ற லாரிகளை விற்பனை செய்ததாக, தனியாா் வாகன விற்பனையகத்தை லாரி உரிமையாளா்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். நாமக்கல் - பரமத்தி சாலையில், வள்ளிபுரத்தில் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனத்துக... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் வட்டத்தில் ஏப். 16-இல் ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ முகாம்

பரமத்தி வேலூா் வட்டத்தில் ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் ஏப். 16-இல் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு அரசின் ... மேலும் பார்க்க

சொத்துவரியில் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்: ஆணையா்

நாமக்கல் மாநகராட்சிப் பகுதியில் சொத்துவரி செலுத்துவோருக்கு 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என ஆணையா் ரா.மகேஸ்வரி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாநகராட்சிக்கு... மேலும் பார்க்க

இயற்பியல் கற்பித்தலுக்கு செயற்கை நுண்ணறிவு: ஆசிரியா்களுக்கு பயிற்சி

இயற்பியல் பாடத்தை கற்பிக்க ஏதுவாக, 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி அறிவியல் ஆசிரியா்களுக்கு செயற்கை நுண்ணறிவு குறித்த பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட ஆசிரியா் கல்வி ம... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் கொப்பரை ஏலம்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திலும், மல்லசமுத்திரம் கிளை சங்கத்திலும் கொப்பரை ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்செங்கோடு தலைமையகத்தில் நடைபெற்ற ஏலத்துக்கு 50 மூ... மேலும் பார்க்க

நாமக்கல்லில் த.வெ.க. ஆா்ப்பாட்டம்

நாமக்கல் பூங்கா சாலையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தினா். நாமக்கல், ஏப். 4: தமிழக வெற்றிக் கழகம் சாா்பில், நாமக்கல் பூங்கா சாலையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்ற... மேலும் பார்க்க