CSK vs DC: "நான் குணமாகிட்டேன்..." - கேப்டன் ருத்துராஜ் கொடுத்த ட்விஸ்ட்; கான்வே...
மீன்பாடி வண்டி திருடர் கைது: 11 மீன்பாடி வண்டிகள் பறிமுதல்
சென்னையில் முதியவர்களை குறிவைத்து மீன் பாடி வண்டிகளைத் திருடிவந்த ஷேக் அய்யூப்(37) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 11 வண்டிகளை பறிமுதல் செய்தனர். மீன்பாடி வண்டிகளை திருடி விற்ற பணத்தில் ஆன்லைனில் ரம்மி ஆடியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டை மின்ட் பகுதியை சேர்ந்த கலியபெருமாள் (61). இவர் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். மேலும் மீன்பாடி வண்டி ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், இளநீர் வியாபாரி கலியபெருமாள் மின்ட் தெருவில் இருந்த போது அங்கு வந்த ஷேக் அய்யூப், பெரம்பூர் பேருந்து நிலையம் பின்புறம் பகுதியிலிருந்து வீட்டில் உள்ள பீரோவை ஏற்றி வர வேண்டும் எனக் கூறி கையோட அழைத்துச் வந்துள்ளார்.
அதன் பிறகு பெரம்பூர் பட்டேல் சாலை வந்த போது பாதிவழியில் கலியபெருமாளிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.4 ஆயிரம் பணத்தையும் அவரது மீன்பாடி வண்டியையும் எடுத்துச் மிரட்டி சென்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த முதியவர் கலியபெருமாள் இது குறித்து அருகில் உள்ள செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பெரம்பூர் செம்பியம் குற்றப்பிரிவு போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், பெரம்பூர் செம்பியம் பகுதியில் உள்ள பல்வேறு சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வெள்ளிக்கிழமை இரவு வண்ணாரப் பேட்டை கீரைத்தோட்டம் போஜர் நகர் பகுதியைச் சேர்ந்த ஷேக் அய்யூப் என்பவரை கைது செய்தனர்.
பின்னர், இவரை பெரம்பூர் செம்பியம் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் மீன்பாடி வண்டி ஓட்டும் வயதான நபர்களை குறி வைத்து வாடகைக்கு அழைத்துச் சென்று அவர்களை மிரட்டி பணம் மற்றும் வண்டியயைப் பறித்து செல்வதை வாடிக்கையாக வைத்திருப்பதாக தெரிவித்தார்.
இந்தியா மீதான இறக்குமதி வரி: 26%-ஆக குறைத்தது அமெரிக்கா
அந்த வகையில் இவர் செம்பியம் திரு.வி.க நகர் கொடுங்கையூர் உள்ளிட்ட பல பகுதிகளில் சுமார் 15-க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து மீன்பாடி வண்டிகளை வாங்கி அதனை திருப்பி தராமல் கோயம்பேடு பகுதிக்கு கொண்டு சென்று அதனை ரூ.3000 முதல் ரூ.5 ஆயிரம் வரை விற்று வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் இவர் வண்டிகளை விற்று அந்த பணத்தில் ஆன்லைனில் ரம்மி அடியதும், ஐந்து குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
இதனையடுத்து கோயம்பேடு பகுதிக்குச் சென்ற செம்பியம் போலீசார், இவர் விற்பனை செய்த 11 மீன்பாடி வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர், ஷேக் அய்யூப் மீது வழக்குப் பதிவு செய்த செம்பியம் குற்றப் பிரிவு போலீசார் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.