15 ஆண்டு கால முரண்பாடு: சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி சென்னையில் ஆசிரியா்க...
"இந்தியாவிலுள்ள தமிழ் மக்களின் கோரிக்கைகளை இலங்கை அரசு நிறைவேற்றும் என நம்புகிறேன்" - பிரதமர் மோடி
பிரதமர் மோடி 3 நாட்கள் அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றிருக்கிறார்.
இந்நிலையில் இன்று பிரதமர் மோடி மற்றும் இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்க முன்னிலையில் இந்தியா- இலங்கை நாடுகளுக்கிடையேயான சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

அதன் பிறகுச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மோடி, "இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே பல நூற்றாண்டுகள் பழமையான ஆன்மீக மற்றும் நெருக்கமான உறவுகள் உள்ளன.
இலங்கை பெற்ற கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க முடிவு செய்துள்ளோம். மீனவர் விவகாரத்தில் மனிதாபிமானத்துடன் அணுக இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
இலங்கை சிறைகளில் இருக்கும் இந்திய மீனவர்களை விடுவிக்க வேண்டும். அவர்களது படகுகளையும் விடுவிக்க வேண்டும்.
இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக 10,000 வீடுகளை இந்தியா கட்டிக் கொடுத்துள்ளது. இலங்கையில் உள்ள மூன்று கோயில்களைச் சீரமைக்க இந்தியா உதவும்.
இந்தியாவில் உள்ள தமிழ் மக்களின் கோரிக்கைகளை இலங்கை அரசு நிறைவேற்றும் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து பேசிய இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்க, "இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் வகையில், எந்த செயலும் இந்த மண்ணில் நடக்காது. இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நட்பு நெருக்கமானது.
டிஜிட்டல் பொருளாதார மேம்பாட்டின் முக்கியத்துவத்தை இலங்கை உணர்ந்திருக்கிறது. இலங்கையின் தனித்துவ டிஜிட்டல் சேவைக்காக இந்தியா ரூ.300 கோடி நிதி தந்ததற்கு நன்றி" என்று கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs