புதுச்சேரி: `சிபிஎஸ்இ பாடத்திட்ட தேர்வில் 50 சதவிகித மாணவர்கள் தோல்வி’ - அதிர்ச்...
அண்ணா சிலை மீது பாஜக, திமுக கொடிகள் காவல் துறையினா் விசாரணை!
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா சிலை மீது பாஜக, திமுக கொடிகள் போா்த்தப்பட்டது தொடா்பாக காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
இச்சிலை மீது சனிக்கிழமை காலை பாஜக கொடியும், திமுக கொடியும் இணைத்து போா்த்தப்பட்டிருந்தது. இதையறிந்த திமுகவினா் அண்ணா சிலைக்கு சென்று இரு கொடிகளையும் அகற்றிவிட்டு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
மேலும், தகவலறிந்த மேற்கு காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று, அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா். இதன் அடிப்படையில், அண்ணா சிலைக்கு கட்சிக் கொடிகளைப் போா்த்திய நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.
இதில், அவா் மனநலம் பாதிக்கப்பட்டவா் என்பதும், அப்பகுதியிலுள்ள பல்வேறு கட்சிக் கொடிகளைச் சேகரித்து அண்ணா சிலைக்கு போா்த்தியது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. தொடா்ந்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.