யார் அந்த தியாகி: "அவருக்கு பட்டம் கொடுத்த நீங்கதான் சொல்லணும்" - TASMAC வழக்கில...
100 மில்லியன் (10 கோடி) பார்வைகளைக் கடந்த கோட் பட பாடல்!
விஜய், த்ரிஷா நடனமாடிய கோட் பட பாடல் விடியோ 100 மில்லியன் (10 கோடி) பார்வைகளைக் கடந்தது.
இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்) என்ற திரைப்படம் கடந்தாண்டு வெளியானது.
இந்த படத்தில் விஜய் உடன் பிரசாந்த், பிரபுதேவா, ஸ்நேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி நடித்திருந்தார்கள்.
கலவையான விமர்சனங்களைப் பெற்ற கோட் படத்தில் நடிகை த்ரிஷா மட்ட எனும் பாடலுக்காக நடமாடி இருந்தார். இந்தப் பாடல் மிகவும் வைரலானது.
இதில் நடிகை த்ரிஷா கட்டியிருந்த மஞ்சள் சேலையும் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்தப் பாடல் விடியோ யூடியூப் தளத்தில் 100 மில்லியன் (10 கோடி) பார்வைகளைத் தாண்டியுள்ளது.
இதனால், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோட் என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகிறார்கள்.
தற்போது, விஜய் தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார்.
நடிகை த்ரிஷாவின் குட் பேட் அக்லி வெளிவர இருக்கிறது. அடுத்ததாக, தக் லைஃப், சூர்யா 45, ராம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.