டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ.85.82-ஆக முடிவு!
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.2 உயர்வு: மத்திய அரசு
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி அறிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறைந்திருக்கும் நிலையில், பெட்ரோல், டீசல் மீதான விலைகள் குறையும் என மக்கள் அதிக ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிலையில், கலால் வரியை மத்திய அரசு அதிகரித்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால், எண்ணெய் நிறுவனங்கள் குறைந்த விலைக்கு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும்போது, அதன் பலன், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டு மக்களுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கச்சா எண்ணெய் இறக்குமதி மீது மத்திய அரசு விதிக்கும் கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால், பெட்ரோல், டீசல் விலை குறையாது, கச்சா எண்ணெய் விலை குறைவினால் ஏற்படும் லாபம், மத்திய அரசுக்கு வருவாயாக செல்லும் என்று கூறப்படுகிறது.