13,000 ரன்கள் விளாசிய ஒரே இந்தியர்.! டி20-ல் புதிய சாதனை படைத்த விராட் கோலி!
லண்டன் செல்கிறார் நிதியமைச்சர்: பிரிட்டனுடன் பொருளாதார பேச்சுவார்த்தை!
புது தில்லி: இந்தியா - பிரிட்டன் இடையிலான பொருளாதாரம் மற்றும் வர்த்தகப் பிரிவிலான பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் லண்டன் செல்கிறார். இதற்காக அவர் திங்கள்கிழமை(ஏப். 7) தில்லியிலிருந்து லண்டனுக்கு புறப்படுகிறார்.
இந்தியா - பிரிட்டன் இடையிலான பொருளாதாரம் மற்றும் வர்த்தகப் பிரிவிலான 13-ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை ஏப். 9 லண்டனில் நடைபெறவுள்ள நிலையில், அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையால் இந்த பேச்சுவார்த்தை கூடுதல் கவனம் பெற்றிருக்கிறது.
தமது ஐரோப்பிய பயணத்தின்போது, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரிய நாடுகளை சேர்ந்த தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள், புத்தாக்க சிந்தனையாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினரையும் சந்திக்கிறார்.