ஐபிஎல் போட்டிகளில் 2,500 ரன்களைக் கடந்த ருதுராஜ் கெய்க்வாட்!
ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் 2,500 ரன்களைக் கடந்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பு ஐபிஎல் சீசனில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.
A journey of pure class!✨ #WhistlePodu#Yellovepic.twitter.com/pZsWCeRvcr
— Chennai Super Kings (@ChennaiIPL) April 7, 2025
தொடர்ச்சியான தோல்விகள் ஒருபுறமிருக்க, ஐபிஎல் போட்டிகளில் 2,500 ரன்களைக் கடந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அசத்தியுள்ளார். தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான கடந்த போட்டியில் 5 ரன்கள் எடுத்ததன் மூலம், அவர் இந்த சாதனையை படைத்தார். ஐபிஎல் தொடரில் இதுவரை 70 போட்டிகளில் விளையாடியுள்ள ருதுராஜ் கெய்க்வாட் 2,501 ரன்கள் குவித்துள்ளார். அதில் 20 அரைசதங்கள் மற்றும் 2 சதங்கள் அடங்கும்.
இதையும் படிக்க: ஐபிஎல்-லிருந்து எப்போது ஓய்வு? மனம் திறந்த எம்.எஸ்.தோனி!
சண்டீகரில் நாளை நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் பஞ்சாப் கிங்ஸை எதிர்த்து விளையாடவுள்ளது.