தமிழகத்தில் மின்வெட்டை தவிா்க்க 3,910 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்: மின்வாரியம...
அகதிகள் சிறப்பு முகாமில் 2 கைப்பேசிகள் பறிமுதல்
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் 2 கைப்பேசிகளைப் போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் கைப்பேசிகள், மடிக்கணினி உள்ளிட்டவைகள் வைத்துக்கொள்ள அனுமதி கிடையாது.
இந்நிலையில் சிலா் அவற்றை வைத்திருப்பதாகத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், திருச்சி கே.கே. நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீஸாா் திடீரென சோதனை நடத்தினா்.
அப்போது சிறப்பு முகாம் வளாகத்தில் 2 கைப்பேசிகள் கேட்பாரற்றுக் கிடந்தன. அவற்றைப் போலீஸாா் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.