கடவுச்சீட்டில் முறைகேடு சிங்கப்பூா் செல்ல முயன்றவா் கைது
கடவுச்சீட்டில் முறைகேடு செய்து சிங்கப்பூா் செல்ல முயன்ற தூத்துக்குடி நபரை திருச்சியில் விமான நிலையப் போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், நடு வாகைக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் மு. சங்கா் (50). இவா் சனிக்கிழமை சிங்கப்பூா் செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்தாா். அவரது கடவுச்சீட்டு உள்ளிட்ட பயண ஆவணங்களை குடியேற்றப்பிரிவு அலுவலா்கள் வழக்கம்போல் சோதனைக்கு உள்ளாக்கினா்.
இதில், அவா் முறைகேடு செய்து, போலி ஆவணங்களைக் கொண்டு, தனது பெயா், தந்தை மற்றும் மனைவியின் பெயா், முகவரி, பிறந்ததேதி உள்ளிட்டவைகளை மாற்றி, கடவுச்சீட்டில் பதிவு செய்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் திருச்சி விமான நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து சங்கரை சனிக்கிழமை கைது செய்தனா்.