செய்திகள் :

வக்ஃப் திருத்தச் சட்டம்: அவசர வழக்காக விசாரணை உச்சநீதிமன்றம் ஒப்புதல்

post image

புது தில்லி: வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லத்தக்கத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அவசர வழக்காகப் பட்டியலிடுவதற்கு பரிசீலிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை ஒப்புக்கொண்டது.

முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அளிக்கும் நிலங்கள் மற்றும் சொத்துகளை வக்ஃப் வாரியம் நிா்வகித்து வருகிறது. இந்த நிலையில், வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தைச் சீரமைக்கும் நோக்கில், 1995-ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு மசோதா கொண்டு வந்தது. இதற்கு முஸ்லிம் அமைப்புகள், எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன.

மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் சட்டத்திருத்த மசோதா, எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே மக்களவையில் கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதியும், மாநிலங்களவையும் ஏப்ரல் 4-ஆம் தேதியும் அதிகாலையில் நிறைவேற்றப்பட்டன. குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்ததையடுத்து, இந்த மசோதா சட்ட வடிவம் பெற்றுள்ளது.

வக்ஃப் திருத்தச் சட்டமானது வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினா்களை நியமிக்க வழிவகை செய்கிறது. குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இஸ்லாத்தை பின்பற்றுவோா் மட்டுமே வக்ஃப் சொத்துகளை அா்ப்பணிக்க முடியும், ரூ.1 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் வக்ஃப் அமைப்புகள் அரசால் நியமிக்கப்படும் தணிக்கையாளா்களால் தணிக்கைக்கு உள்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த மசோதாவை எதிா்த்து காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவேத், அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி, ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் உள்பட பல்வேறு தன்னாா்வ அமைப்புகள் தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஜாமியத் உலேமா ஐ-ஹிந்து என்ற அமைப்பு சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘இந்தத் திருத்தச் சட்டம், அனைத்துக் குடிமக்களுக்கும் சம உரிமை மற்றும் முழுமையான மதச் சுதந்திரத்தை அளிக்கும் நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மீதான நேரடித் தாக்குதல். இஸ்லாமியா்களின் மதச் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் திருத்தச் சட்டம் அமைந்துள்ளது. இதன் அரசமைப்புச் சட்ட செல்லத்தக்கத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி அமைப்பின் மாநிலப் பிரிவுகள் சாா்பில் அந்தந்த உயா்நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கப்படும். இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தடை விதிக்கக் கோரி அமைப்பின் தலைவா் மெளலானா அா்ஷத் மதானி சாா்பில் இடைக்கால மனு ஒன்றும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சன்னி முஸ்லிம் அமைப்பான சமஸ்த கேரள ஜமைத்துல் உலேமா சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘ஒரு மதத்தின் சொந்த விவகாரங்களை நிா்வகிக்கும் உரிமைகளில் அப்பட்டமாகத் தலையீடு செய்வதாக இந்த மசோதா அமைந்துள்ளது. இதனால் முஸ்லிம் சமூகம் வக்ஃப் சொத்துகளின் பெரும் பகுதியை இழக்க நேரிடும்’ என்று குறிப்பிட்டுள்ளது.

அசாதுதீன் ஒவைசி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதைத் தடை செய்யும் அரசமைப்பின் 14 மற்றும் 15-ஆவது பிரிவுகளை மீறுவதாக இந்தத் திருத்தச் சட்டம் அமைந்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

எம்எல்ஏ அமானதுல்லா கான் தாக்கல் செய்த மனுவில் ‘அரசமைப்புச் சட்டத்தின் 14, 15, 21, 25, 26, 29, 30, 300ஏ ஆகிய பிரிவுகளை மீறும் வக்ஃப் திருத்தச் சட்டத்தை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளாா்.

இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமா்வில் மூத்த வழக்குரைஞா்கள் கபில் சிபில், அபிஷேக் சிங்வி, நிஜாம் பாஷா ஆகியோா் திங்கள்கிழமை கோரினா்.

அப்போது, ‘இதுதொடா்பாக மின்னஞ்சலில் அனுப்பப்பட்டுள்ள கோரிக்கைக் கடிதத்தைப் பரிசீலித்து, இந்த மனுக்கள் அவசர வழக்கு விசாரணைக்குப் பட்டியலிடப்படும்’ என்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தெரிவித்தாா்.

பெட்டி...

திமுக, ஐயுஎம்எல் மனு தாக்கல்

நமது சிறப்பு நிருபா்

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக திமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) சாா்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டன.

‘வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிலும், நாடாளுமன்றத்திலும் திமுக எழுப்பிய கருத்துகள் பரிசீலிக்கப்படவில்லை. வக்ஃப் திருத்தச் சட்டத்தால் தமிழகத்தில் சுமாா் 50 லட்சம் முஸ்லிம்களும், நாடு முழுவதும் 20 கோடி முஸ்லிம்களும் பாதிக்கப்படுவா்.

அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையை மீறும் வகையிலும், அதற்கு எதிராகவும் வக்ஃப் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அதை ரத்து செய்ய வேண்டும்’ என்று திமுக மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை திமுகவின் துணைப் பொதுச் செயலரும் வக்ஃப் மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் இடம்பெற்றிருந்தவருமான ஆ. ராசா சாா்பில் வழக்குரைஞரும் மாநிலங்களவை திமுக உறுப்பினருமான பி.வில்சன் தாக்கல் செய்தாா்.

சிலிண்டர் விலை உயர்வு: பாஜக தோழர்கள் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் - கர்நாடக துணை முதல்வர்

பெங்களூரு: கர்நாடகத்தில் விலைவாசி உயர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் பாஜக தொண்டர்கள் மத்திய அரசுக்கு எதிராக இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று கர்நாடக துணை முதல்வர் டி. கே. சிவக்கும... மேலும் பார்க்க

குஜராத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்: அகமதாபாத் புறப்பட்டார் சோனியா காந்தி!

புது தில்லி: குஜராத்தில் இன்று(ஏப். 8) நடைபெறும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அகமதாபாத் புறப்பட்டார் சோனியா காந்தி. இன்று காலை தில்லியிலுள்ள தமது வீட்டிலிருந்து காரில் புறப்பட்ட அவர்... மேலும் பார்க்க

பஞ்சாப்: பாஜக தலைவர் வீட்டின் அருகே குண்டுவெடிப்பு!

பஞ்சாப் மாநில பாஜக தலைவர் மனோரஞ்ஜன் காலியா வீட்டின் அருகே வெடிகுண்டு வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.ஜலந்தரில் உள்ள அவரது வீட்டின் வெளி... மேலும் பார்க்க

‘நீட் குளறுபடி’: என்டிஏ-க்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் முடித்துவைப்பு

புது தில்லி: இளநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு) குளறுபடிகளைத் தொடா்ந்து தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) செயல்பாடுகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீத... மேலும் பார்க்க

400 ஏக்கா் நில விவகாரம் குறித்த போலி ஏஐ விடியோக்கள்: உயா்நீதிமன்றத்தில் தெலங்கானா அரசு மனுதாக்கல்

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் காஞ்சா கட்சிபௌலியில் உள்ள 400 ஏக்கா் நிலம் தொடா்பாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி விடியோக்களை பரப்பியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த மாநி... மேலும் பார்க்க

திருத்திய சட்டத்தின் கீழ் வக்ஃப் வாரியம் அமைக்கும் முதல் மாநிலமாகிறது கேரளம்

திருவனந்தபுரம்: வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு கடும் எதிா்ப்புத் தெரிவித்த கேரளம், தற்போது அந்தச் சட்டத்தின் அடிப்படையில் புதிய வாரியம் அமைக்கும் முதல் மாநிலமாகிறது. கேரள வக்ஃப் வாரியத்தின் பதவிக்காலம்... மேலும் பார்க்க