நெல்லை உள்பட 4 மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மே 29, 30இல் சுற்று நீதிமன்றம்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
கு. இராசசேகரன்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,520 கன அடியாக அதிகரித்துள்ளது.
இன்று(ஏப். 8) காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.72 அடியில் இருந்து 107.79அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 275 கன அடியிலிருந்து வினாடிக்கு 2,520 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
நீர் இருப்பு 75.30 டிஎம்சியாக உள்ளது.
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,520கன அடியாக அதிகரித்துள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவில் இருந்து மீண்டு மெல்ல உயரத் தொடங்கியுள்ளது.