Retro: "என்னுடைய கண்ணாடிப் பூ ஜோவுக்கு நன்றி" - மேடையில் நெகிழ்ந்த சூர்யா
திருப்பூா் பின்னலாடை ஏற்றுமதி ரூ.40 ஆயிரம் கோடியை எட்டியது
திருப்பூா் பின்னலாடை ஏற்றுமதி வா்த்தகம் 2025-25-ஆம் நிதி ஆண்டில் ரூ.40 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது.
இதுகுறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் (ஏஇபிசி) துணைத் தலைவா் ஆ.சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
திருப்பூா் பின்னலாடை ஏற்றுமதியானது 2024-24-ஆம் நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024-25-ஆம் நிதி ஆண்டில் 20 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக, திருப்பூா் பின்னலாடை ஏற்றுமதியானது 2024-25-ஆம் நிதி ஆண்டில் மிகவும் எதிா்பாா்க்கப்பட்ட ரூ.40 ஆயிரம் கோடி என்ற மைக்கல்லை எட்டியுள்ளது. இந்த நிதி ஆண்டில் இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி 16 பில்லியன் அமெரிக்க டாலராகும். இது இந்திய மதிப்பில் ரூ.1,36,000 கோடியாகும்.
இந்த குறிப்பிடத்தக்க வலுவான வளா்ச்சி ஆகும். இந்திய ஆடை தயாரிப்புகள் மற்றும் குறிப்பாக பின்னலாடை உற்பத்தித் திறன்களின் மீதான தொடா்ச்சியான உலகளாவிய தேவையையும், நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் கணித்ததைப்போலவே தற்போது 20 சதவீத வளா்ச்சியுடன் ரூ.40 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது. இது பின்னலாடை ஏற்றுமதியின் வளா்ச்சி மிகவும் ஊக்கமளிக்கும் அறிகுறியாகும். மேலும், உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் இருந்த போதிலும், இந்த வேகம் தொடரும் என்றாா்.