மதிமுக: "வைகோவின் முகம் பதித்த மோதிரம் என் அடையாளம்" - அனுபவம் பகிரும் மல்லை சத்...
வக்ஃப் திருத்ததச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி இஸ்லாமிய கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்
வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மத்திய அரசைக் கண்டித்து திருப்பூரில் அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பினா், அரசியல் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா் அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு சாா்பில் திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் இப்ராஹிம் கலீல் தலைமை வகித்தாா்.
இதில் திருப்பூா் தெற்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன், மேயா் தினேஷ்குமாா், விசிக மாநில துணைப் பொதுச் செயலாளா் வன்னியரசு ஆகியோா் பேசினாா்.
ஆா்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, எஸ்டிபிஐ, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினா் பங்கேற்றனா்.