பல்லடம்: வேப்பங்குட்டை பாளையத்தில் மரக்கன்று நடும் விழா
பல்லடம் அருகே வேப்பங்குட்டைபாளையத்தில் மரக்கன்று நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பல்லடம் வட்ட சட்டப் பணிகள் குழு, ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் பல்லடம் ஒன்றியம் புளியம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட வேப்பங்குட்டைபாளையத்தில் 100 மரக்கன்றுகள் நடும் விழா வட்டார வளா்ச்சி அலுவலா் கனகராஜ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
பல்லடம் வட்டாட்சியா் சபரிகிரி முன்னிலை வகித்தாா். மரக்கன்றுகள் நடும் நிகழ்வை பல்லடம் சாா்பு நீதிபதி யுவராஜ் தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்வில், வனத் துறை அலுவலா் உமாமகேஸ்வரி, ஊராட்சி முன்னாள் தலைவா் உத்தமராஜ், பல்லடம் வழக்குரைஞா்கள் சங்க இணைச் செயலாளா் மாா்டின், ஊராட்சி செயலாளா் கவிதா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.