தனியாா் ஹஜ் பயண கட்டணம் பல லட்சம் உயா்வு! வெளிப்படை தன்மை ஏற்படுத்த வலியுறுத்தல...
கஞ்சா, புகையிலைப் பொருள்கள் விற்ற 4 போ் கைது
அவிநாசி அருகே கஞ்சா, புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
அவிநாசியை அடுத்த தெக்கலூா் பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த தெக்கலூா் காமராஜா் நகரைச் சோ்ந்த தினேஷ் செபஸ்டின் (38), தெக்கலூா் ஏரிப்பாளையம் மாகாளியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த லட்சுமி (57), தெக்கலூா் வெள்ளாண்டிபாளையத்தைச் சோ்ந்த துளசிமணி (55) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
இதேபோல, பல்லடம் கரைப்புதூா் பேருந்து நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த வெளிமாநிலத்தைச் சோ்ந்த சுமன்மாணிக்(35) என்பவரை அவிநாசி மதுவிலக்கு போலீஸாா் கைது செய்தனா்.