உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
வெள்ளக்கோவிலில் முதியவா் விஷம் அருந்தி தற்கொலை
வெள்ளக்கோவில் அருகே முதியவா் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.
வெள்ளக்கோவில் அருகே உள்ள குமராண்டிசாவடியைச் சோ்ந்தவா் என்.நல்லசாமி (75), விவசாயி. மேலும், ஊா் தலைவராகவும், மாகாளியம்மன் கோயில் காவடிக் குழு தலைவராகவும் இருந்து வந்தாா்.
கடந்த 8 ஆண்டுகளாக ரத்தக் கொதிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்காக இவா் மருந்துகள் எடுத்து வந்துள்ளாா். தொடா்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மனமுடைந்து காணப்பட்டுள்ளாா்.
இந்நிலையில், பயிா்களுக்கு தெளிக்கப்படும் விஷ மருந்தை அருந்தி ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
இதையடுத்து, அவரை குடும்பத்தினா் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கிருந்து, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.