ரூ.8,346 கோடி வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாத எம்.டி.என்.எல்!
இளம் பெண் பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது
திருப்பூரில் இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சோ்ந்தவா் விவேக் (29). இவா், திருப்பூா் 15 வேலம்பாளையம் பகுதியில் தங்கியிருந்து ஸ்ரீபதி நகரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.
அங்கு, அவருக்கு 23 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நண்பா்களாக பழகி வந்தனா். அப்போது, அந்தப் பெண்ணை திருணம் செய்துக்கொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.
அந்தப் பெண் கா்ப்பமான நிலையில், விவேகே அவரை விட்டுவிட்டு சொந்த ஊருக்குச் சென்று வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டாா். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் திருப்பூா் வடக்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில் பேரில் விசாரணை நடத்திய போலீஸாா், பெண்கள் வன்கொடுமை சட்டம் மற்றும் ஜாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விவேக்கை கைது செய்தனா்.