செய்திகள் :

14 வயதில் ஐபிஎல் தொடரில் அறிமுகமான சிறுவன்..! சுந்தர் பிச்சை கூறியதென்ன?

post image

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 14 வயதில் அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி குறித்து சுந்தர் பிச்சை புகழ்ந்து பேசியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 36-ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான், லக்னௌ அணிகள் நேற்றிரவு ஜெய்பூரில் மோதின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னௌ அணி முதலில் பேட்டிங் செய்து 180 ரன்கள் எடுத்தது.

அடுத்து விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 178/5 ரன்கள் எடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

இந்தப் போட்டியில் 14 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக களமிறங்கினார். தனது முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த இவர் 20 பந்துகளில் 34 ரன்கள் அடித்தார்.

மார்க்ரம் வீசிய பந்தில் ரிஷப் பந்திடம் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்த சூர்யவன்ஷி அழுதுகொண்டே வெளியேறினார்.

பலரும் இந்த இளம் வீரருக்கு வாழ்த்துகளை தெரிவித்துவரும் நிலையில் கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை தனது எக்ஸ் தளத்தில், “8-ஆவது படிக்கும் சிறுவனின் ஐபிஎல் விளையாட்டை பார்ப்பதற்காக எழுந்தேன்!!! என்ன ஒரு அறிமுகம்!” எனக் கூறியுள்ளார்.

சுந்தர் பிச்சை தமிழ்நாட்டில் பள்ளியில் படிக்கும்போது கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டிங்கில் சொதப்பிய பஞ்சாப்: ஆர்சிபி வெற்றிபெற 158 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் 2025-இன் 37-ஆவது போட்டியில் முல்லன்பூர் திடலில் நடைபெறும் போட்டியில் ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சைத் தேர்... மேலும் பார்க்க

ஆர்சிபி பந்துவீச்சு: அணியில் லிவிங்ஸ்டன் நீக்கம்!

ஐபிஎல் 2025-இன் 37-ஆவது போட்டியில் முல்லன்பூர் திடலில் நடைபெறும் போட்டியில் ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சைத் தேர... மேலும் பார்க்க

மிட்செல் ஸ்டார்க்காக விரும்பவில்லை..! ஆட்ட நாயகன் ஆவேஷ் கானின் பேட்டி!

ஜெய்பூரில் நேற்றிரவு (ஏப்.19) நடைபெற்ற ராஜஸ்தான் - லக்னௌ அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற லக்னௌ முதலில் பேட்டிங் செய்து 180 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 178/5 ரன்கள் மட்டுமே எடுத்து... மேலும் பார்க்க

மார்க்ரம், பதோனி அரைசதம்: ராஜஸ்தான் அணிக்கு 181 ரன்கள் இலக்கு!

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னௌ அணி 180 ரன்கள் எடுத்தது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 36ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான், லக்னௌ அணிகள் மோதுகின்றன. ஜெய்ப்பூரில் நடைபெறும் இந்த ஆ... மேலும் பார்க்க

ஜோஸ் பட்லர் அதிரடி: தில்லியை வீழ்த்தியது குஜராத்

ஜோஸ் பட்லரின் அதிரடி காரணமாக தில்லியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 35ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், தில்லி கேபிடல்ஸ் அணி... மேலும் பார்க்க

தில்லி கேபிடல்ஸ் அதிரடி: குஜராத் டைட்டன்ஸுக்கு 204 ரன்கள் இலக்கு!

குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் அணி 203/8 ரன்கள் எடுத்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தில்லி வீரர்கள் யாருமே அர... மேலும் பார்க்க