அமெரிக்க துணை அதிபர் நாளை இந்தியா வருகை: வட மாநிலங்களில் மட்டும் சுற்றுப்பயணம்!
UPSC/TNPSC : 'நான் பெறாத வாய்ப்பை மற்றவர்கள் பெற வேண்டும், அதற்காகத்தான்'- பயிற்றுநர் சங்கர சரவணன்
'UPSC/TNPSC குரூப் -1, 2 -தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கின்றன.
'UPSC/TNPSC குரூப் -1, 2 - தேர்வுகளில் வெல்வது எப்படி?' என்ற தலைப்பிலான இந்த இலவசப் பயிற்சி முகாம் வருகிற ஏப்ரல் 27 ஆம் தேதி சென்னை தி.நகர், G.N செட்டி ரோட்டில் உள்ள வாணி மஹாலில் நடைபெற இருக்கிறது. அதனுடன் ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வும் நடக்கிறது.

இந்நிகழ்வில் போட்டித் தேர்வு பயிற்றுநர் டாக்டர். சங்கர சரவணன் மாணவர்களிடையே சிறப்புரை ஆற்ற இருக்கிறார். இந்நிலையில் சங்கர சரவணனைத் தொடர்புகொண்டு பேசினோம். நம்மிடையே பணி அனுபவம் மற்றும் போட்டித் தேர்வுக்கு மாணவர்கள் எப்படித் தயாராக வேண்டும் என்பது குறித்துப் பேசிய அவர், " சிவில் சர்வீஸ் பயிற்றுநராக எனக்கு 25 வருட அனுபவம் இருக்கிறது.
நான் போட்டித் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருக்கும்போதே என் நண்பர்கள், சீனியர்கள், நேர்காணலுக்குச் செல்லும்போது அவர்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தேன். UPSC பயிற்றுநர் என்பது தனித்துவமான ஒரு ரோல்.
போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவரின் ப்ளஸ் என்ன? மைனஸ் என்ன? என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு அவர்களைத் தயார்ப்படுத்த வேண்டும். எங்களுடைய அனுபவங்களை வைத்து எப்படித் தயாராக வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுப்போம். குறிப்பாக எங்களை நாங்களே அப்பேட் செய்துகொள்வோம்.

ஒவ்வொரு மாணவரும் கேள்விக்கு எப்படி பதிலளிக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அந்த ஆற்றலை நிச்சயம் வளர்த்துக்கொள்ள வேண்டும். நிறைய பேர் படித்ததை எழுதிப்பார்க்க மாட்டார்கள். ஆனால் நிச்சயம் எழுதிப் பார்க்க வேண்டும். முதன்மைத் தேர்வில் தேர்ச்சிப்பெற வேண்டும் என்றால் நிச்சயம் 100 டெஸ்ட்டாவது எழுதிப்பார்க்க வேண்டும்.
எழுதிப் பார்க்கும்போதுதான் ப்ளஸ், மைனஸ் எல்லாம் தெரியும். கேள்விகளைச் சரியாகப் புரிந்துகொண்டு பதிலளிக்க வேண்டும். தேர்வுக்காக நாம் படிக்கிற கேள்விகளை எப்போதும் அப்படியே கேட்க மாட்டார்கள். ஆனால் கேள்விக்கு ஏற்ற மாதிரி படித்த விஷயங்களை மாணவர்கள் எழுத வேண்டும்.
இதற்கெல்லாம் நாங்கள் பயிற்சிகொடுப்போம். தேர்வுக்குத் தேவைப்படும் சில நுணுக்கங்களைச் சொல்லிக்கொடுப்போம். UPSC தேர்ச்சிபெறாதவர்கள் எல்லோராலும் பயிற்றுநர் ஆக முடியாது.
மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்கின்ற திறமை இருக்க வேண்டும். பயிற்றுநர்களுக்கும் வாசிப்பு நாட்டம் இருக்க வேண்டும். மாணவர்களிடம் இருந்தும் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுடன் தொடர்ந்து உரையாட வேண்டும். அப்போது நிறைய அனுபவங்கள் கிடைக்கும். நான் பெறாத வாய்பை மற்றவர்கள் பெற வேண்டும் என்றுதான் கற்றுக் கொடுக்கிறேன்" என்றார்.
இந்தப் பயிற்சி முகாமிற்கு முன்பதிவு செய்ய 044- 66802997 என்ற எண்ணிற்கு மிஸ்ட்கால் கொடுக்கவும். அப்படி இல்லையென்றால் இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்புகின்றவர்கள் கீழ்க்கண்ட விண்ணப்பத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.