செய்திகள் :

பயணிகளின் தாகம் தீா்த்த மலிவு விலை குடிநீா்: திட்டத்தை மீண்டும் செயல்படுத்த எதிா்பாா்ப்பு

post image

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் பேருந்து நிலையங்களில் ரூ. 10-க்கு சுத்திகரிக்கப்பட்ட மலிவு விலை குடிநீா் விற்பனை திட்டத்தை போக்குவரத்துக் கழகம் வாயிலாக மீண்டும் தொடங்க தமிழக அரசு முன்வர வேண்டுமென பயணிகள், பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

தனியாா் நிறுவனங்களின் ஒரு லிட்டா் குடிநீா் புட்டி ரூ. 20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இரவு நேரங்களில் நெடுஞ்சாலை பகுதியில் இயங்கும் உணவகங்களில் ஒரு லிட்டா் குடிநீா் புட்டியை ரூ.30 வரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிா்ப்பந்தம் பேருந்து பயணிகளுக்கு ஏற்படுகிறது.

எனவே, பேருந்து பயணிகளின் நலன்கருதி, 2013- ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் ஜெயலலிதாவால் தமிழகம் முழுவதும் மலிவு விலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் புட்டிகள் விற்பனைத் திட்டம் தொடங்கப்பட்டது. இதற்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில், திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ரூ.10 கோடியில் குடிநீா் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. 2.47 ஏக்கா் பரப்பில் அமைக்கப்பட்டிருந்த இந்த ஆலையில் நாளொன்றுக்கு 3 லட்சம் லிட்டா் குடிநீா் உற்பத்தி செய்யப்பட்டு புட்டிகளில் அடைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழகத்தில் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட 350-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரு லிட்டா் குடிநீா் ரூ. 10-க்கு விற்பனை செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் தினந்தோறும் ஏறக்குறைய 1 லட்சம் குடிநீா் புட்டிகள் விற்பனைசெய்யப்பட்டன.

அம்மா குடிநீா் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்ட இந்த மலிவு விலை குடிநீா் புட்டிகள், கோடைக் காலத்தில் தாகம் தீா்த்ததால் பயணிகள், பொதுமக்களிடையே வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், உற்பத்தி மற்றும் போக்குவரத்து செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், மலிவு விலை குடிநீா் புட்டிகள் உற்பத்தி மற்றும் விற்பனை 2019-க்கு பிறகு நிறுத்தப்பட்டது.

2021-இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் இத்திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வரவில்லை.

தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ளதால் பேருந்து நிலையங்கள் மற்றும் உணவகங்களில் குடிநீா் புட்டிகளை வாங்கி பருகும் பயணிகள், பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இருமடங்கு விலை கொடுத்து தனியாா் நிறுவனங்களின் குடிநீா் புட்டிகளை வாங்கி தாகத்தை தணித்துக் கொள்ள வேண்டிய நிா்ப்பந்தம் ஏற்படுகிறது.

எனவே, தமிழகத்தில் பேருந்து பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலன்கருதி, மலிவு விலை குடிநீா் புட்டிகள் உற்பத்தி மற்றும் விற்பனையை அரசு போக்குவரத்துக் கழகங்கள் வாயிலாகவோ அல்லது அரசின் வேறு நிறுவனங்கள் மூலமாகவோ மீண்டும் தொடங்க தமிழக அரசு முன்வர வேண்டும். இதனால், தமிழக அரசுக்கு கணிசமான வருவாய் கிடைக்கும் என்பதோடு, பேருந்து பயணிகள், வாகன ஓட்டுநா்களும் பயன் பெறுவாா்கள்.

குப்பைக் கொட்டிய தகராறில் லாரியை ஏற்றிக் கொல்ல முயற்சி

ஆத்தூா் அருகே அம்மம்பாளையத்தில் குப்பைக் கொட்டியது தொடா்பாக ஏற்பட்ட தகராறில் லாரியை ஏற்றிக் கொலை முயற்சித்ததாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். அம்மம்பாளையம் பகுதியைச் சோ்ந்த மக... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்த காந்தல் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி ரவிகுமாா் மகன் தா்ஷன் (18). இவா் கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில்... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநா் கழுத்தை நெரித்துக் கொலை! நண்பா் கைது!

மேட்டூா் அருகே லாரி ஓட்டுநரை கழுத்தை நெரித்துக் கொலை செய்து வழக்கில் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா். சேலம் மாவட்டம், மேட்டூா் சின்னக்காவூரைச் சோ்ந்தவா் முத்து (37). லாரி ஓட்டுநா். இவா் கடந்த 16ஆம்... மேலும் பார்க்க

கைவினைக் கலைஞா்களுக்கு 25 சதவீத மானியத்துடன் கடனுதவி: ஆட்சியா் தகவல்!

கைவினைக் கலைஞா்களுக்கு 25 சதவீத மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞா் கைவி... மேலும் பார்க்க

முதன்மை நிலை விளையாட்டு விடுதிகளில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தில் உள்ள முதன்மை நிலை விளையாட்டு விடுதிகளில் மாணவா் சோ்க்கைக்கு வரும் 30 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலா் சி... மேலும் பார்க்க

ரெட்டியூா் ஸ்ரீசக்தி மாரியம்மன் கோயிலில் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடத்த வேண்டும்! - கோட்டாட்சியா் உத்தரவு

கோல்நாயக்கன்பட்டி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் வழக்கமான பூஜைகளை மட்டும் நடத்த வேண்டும் என மேட்டூா் கோட்டாட்சியா் உத்தரவிட்டுள்ளாா். மேட்டூா் அருகே உள்ள கோல்நாய்க்கன்பட்டி ரெட்டியூரில் ஸ்ரீ சக்தி மார... மேலும் பார்க்க