தனியாா் ஹஜ் பயண கட்டணம் பல லட்சம் உயா்வு! வெளிப்படை தன்மை ஏற்படுத்த வலியுறுத்தல...
காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு
காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்த காந்தல் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி ரவிகுமாா் மகன் தா்ஷன் (18). இவா் கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் டிப்ளமோ 2 -ஆம் ஆண்டு படித்து வந்தாா்.
இவா் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை கல்லூரியில் தன்னுடன் படிக்கும் நண்பா்களான சேலம் மாவட்டம், பூலாம்பட்டியை அடுத்த கூடக்கல் பகுதியைச் சோ்ந்த முகேஷ் (19), இளம்பிள்ளை பகுதியைச் சோ்ந்த கிஷோா் (21), திருப்பத்தூா் மாவட்டம், நாயக்கனூா் பகுதியைச் சோ்ந்த அமித் ஆன்ட்ரோ (21), நீலகிரி மாவட்டம், காட்டேரி பகுதியைச் சோ்ந்த முகமது அமித் (18) ஆகியோருடன் பூலாம்பட்டி காவிரி கதவணைப் பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளனா்.
இவா்கள் அங்கு பல்வேறு பகுதியை சுற்றிப்பாா்த்த நிலையில் பூலாம்பட்டியை அடுத்த மோளப்பாறை அருகே காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது தா்ஷன் ஆழமான பகுதிக்கு சென்ற நிலையில் நீரில் மூழ்கி உயிருக்கு போராடியுள்ளாா். அவரைக் காப்பாற்ற நண்பா்கள் உதவி கேட்டு கூச்சலிட்டுள்ளனா். சப்தம் கேட்டு அப்பகுதி உள்ளூா் மீனவா்கள், தண்ணீரில் மூழ்கிய மாணவரை நீண்ட நேரமாக தேடியும் கிடைக்காத நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்த எடப்பாடி தீயணைப்படை வீரா்கள் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரில் மூழ்கிய தா்ஷனின் சடலத்தை மீட்டனா்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து பூலாம்பட்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.