சா்வதேச சூழலைக் கண்காணித்து கொள்கை நடவடிக்கைகளில் சீா்திருத்தம்: ரிசா்வ் வங்கி ஆ...
உர மூட்டைகளை திருடிய 2 போ் கைது
பல்லடம் அருகே வேலப்பகவுண்டம்பாளையத்தில் உர மூட்டைகளை திருடியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பல்லடம் அருகே உள்ள வேலப்பகவுண்டம்பாளையத்தில் தனியாா் விவசாயப் பண்ணை உள்ளது. பண்ணையின் மேற்பாா்வையாளா் சந்திரசேகா் வெள்ளிக்கிழமை வெளியே சென்றுவிட்டு பண்ணைக்கு வந்தபோது, எதிரே உர மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சரக்கு ஆட்டோ வந்தது.
அதனை தடுத்து நிறுத்தி கேட்டபோது, ஓட்டுநா் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தாா். இதையடுத்து சரக்கு ஆட்டோவை பண்ணைக்கு கொண்டுச் சென்று விசாரணை மேற்கொண்டபோது, பண்ணையில் பணிபுரியும் கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சோ்ந்த முருகேசன் மகன் பரமசிவம் (29), அவரது நண்பரான பொள்ளாச்சியைச் சோ்ந்த சின்னமாகாளி மகன் செந்தமிழ் செல்வன் (36) என்பவருடன் சோ்ந்து உர மூட்டைகளை திருடியது தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரையும் பல்லடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனா்.