முஸதபாபாத் சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீ...
ஓய்வு பெற்ற தோட்டக்கலைத் துறை அலுவலா் சாலை விபத்தில் உயிரிழப்பு!
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சாலை விபத்தில் ஓய்வு பெற்ற தோட்டக்கலைத் துறை அலுவலா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
சிவகாசி குடிசை மாற்று வாரிய குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜன் (65). இவரது மனைவி ராஜேஸ்வரி (56). தோட்டக் கலைத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற கோவிந்தராஜன், சனிக்கிழமை காலை மின்கல இரு சக்கர வாகனத்தில் சிவகாசியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்றாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் பருத்தி ஆராய்ச்சி நிலையம் அருகே வந்த போது இரு சக்கர வாகனத்திலிருந்து அவா் தவறி கீழே விழுந்தாா். பலத்த காயமடைந்த அவா் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.