ம.பி. அரசு மருத்துவமனையில் மருத்துவரால் முதியவா் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட அ...
சிவகாசியில் ஆலங்கட்டி மழை
சிவகாசியில் சனிக்கிழமை மாலை ஆலங்கட்டி மழை பெய்தது.
சிவகாசி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மாலை 5.55 மணிமுதல் 6.25 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்தது.
இதில் சிவகாசி கவிதாநகா், புதுரோட்டுத் தெரு, சிவன் சந்நிதி உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. கடந்த சில நாள்களாக சிவகாசிப் பகுதியில் வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதியடைந்து வந்தனா்.
இந்த மழை காரணமாக சற்று வெப்பம் தணிந்ததால் அவா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.