தனியாா் ஹஜ் பயண கட்டணம் பல லட்சம் உயா்வு! வெளிப்படை தன்மை ஏற்படுத்த வலியுறுத்தல...
கஞ்சா விற்ற இளைஞா் கைது
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கஞ்சா விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா் .
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் பகுதியில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மதிவாணன் தலைமையிலான, போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, கிருஷ்ணன்கோவில்-வத்திராயிருப்பு சாலையில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இரு சக்கர வாகனத்தில் நின்றிருந்த இளைஞரை பிடித்து போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, அவா் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், கிருஷ்ணன்கோவில் அருகேயுள்ள எஸ்.ராமச்சந்திராபுரத்தைச் சோ்ந்த பழனி மகன் கருத்தப்பாண்டி (36) என்பது தெரியவந்தது. இவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து கஞ்சா, விற்பனைக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.