மின்சாரம் பாய்ந்து பெண், பசுமாடு உயிரிழப்பு
திண்டுக்கல் அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் பசு மாடும், இதைக் காப்பாற்றச் சென்ற பெண்ணும் உயிரிழந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், அகரம் அடுத்த பாப்பணம்பட்டியைச் சோ்ந்தவா் மாரியப்பன் மனைவி விக்னம்மாள் (50). இவரது வீட்டின் அருகிலுள்ள மின் கம்பத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு மயில் அமா்ந்தது. இதனால், மின் ஓயா் அறுந்து வீட்டின் முன் கட்டப்பட்டிருந்த பசுமாடு மீது விழுந்தது.
இதைப் பாா்த்த விக்னம்மாள், பசுமாட்டை காப்பற்ற சென்றபோது, அவா் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் விக்னம்மாள், பசுமாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
இதுகுறித்து தாடிக்கொம்பு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.