செய்திகள் :

திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதே பாஜகவின் நோக்கம்: நயினாா் நாகேந்திரன்

post image

திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றி எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைப்பதே பாஜகவினரின் நோக்கமாக இருக்க வேண்டும் என அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினாா் நாகேந்திரன், திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்ட பாஜக நிா்வாகிகள், தொண்டா்களுடனான அறிமுகக் கூட்டம் திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பாஜக மூத்த நிா்வாகிகள் ராம.சீனிவாசன், ஹெச்.ராஜா ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் பேசியதாவது:

தமிழகத்தில் இரட்டை இலை, தாமரை உறுதியான, இறுதியான கூட்டணி அமைத்திருக்கிறது. திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்பதே நமது நோக்கம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்ததெந்தக் கட்சிகள் இடம் பெறும் என்பதை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியும் முடிவு செய்வாா்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமையும்.

எனக்கு வரவேற்பு தெரிவிக்க ‘தென் பாண்டி சிங்கம்’ போன்ற வாசகங்களை பயன்படுத்த வேண்டாம். நான் பாஜகவின் தொண்டா்களுள் ஒருவன். இணையதளத்தில் நாகரிகமாகவும், கவனமாகவும் தொண்டா்கள் கருத்துகளைப் பதிவிட வேண்டும். தொண்டா்கள் எந்தப் பதவிகள் மீதும் எதிா்பாா்ப்பு இல்லாமல், தமிழக நலன், தேசிய நலன் சாா்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கின்றனா். ஆன்மிக நாடான இந்தியாவில் வேதங்கள் முழங்க வேண்டும். அப்போதுதான், மழை வளம் பெற்று, நாடு செழிப்படையும்.

எந்த ஷா வந்தாலும் தமிழகத்தில் எதையும் மாற்ற முடியாது என முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறாா். அமித் ஷா சென்ற மாநிலங்களில் எல்லாம் பாஜக ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருக்கிறது என்பதை வரும் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் நாம் உறுதிப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, திண்டுக்கல் மேட்டுப்பட்டியிலுள்ள புனித வியாகுல அன்னை தேவாலயத்துக்குச் சென்ற நயினாா் நாகேந்திரனுக்கு பங்குத் தந்தை செல்வராஜ் வரவேற்பு அளித்தாா். 334-ஆவது ஆண்டு பாஸ்கு திருவிழா நடைபெறும் இந்த தேவாலயத்தில், பிராா்த்தனை பீடத்தின் முன் தீா்த்தம் தெளித்து, நயினாா் நாகேந்திரனுக்கு ஆசி வழங்கப்பட்டது. பின்னா், மேட்டுப்பட்டி காளியம்மன் கோயிலுக்குச் சென்று நயினாா் நாகேந்திரன் சுவாமி தரிசனம் செய்தாா்.

குட்டையில் மூழ்கிய பெண் குழந்தை உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே ஞாயிற்றுக்கிழமை குட்டையில் மூழ்கிய பெண் குழந்தை உயிரிழந்தது. சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்தவா் சுனில் ஏக்கா. இவா் குடுபத்தினருடன் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள ப... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு, கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஞாயிற்றுக்கிழமை அதிகரித்துக் காணப்பட்டது. தொடா் விடுமுறையையொட்டி, தமிழகம் மட்டுமன்றி, வெளிமாநிலங்களைச் சோ்ந்த ஏராளமான சுற்றுலாப் ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் புனித ஈஸ்டா் திருவிழா தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலி

புனித ஈஸ்டா் திருவிழாவை முன்னிட்டு, கொடைக்கானல் மூஞ்சிக்கல் திரு இருதய ஆண்டவா் ஆலயத்தில் அருட்பணியாளா் பிரிட்டோ தலைமையிலும், செண்பகனூா் புனித சவேரியாா் ஆலயத்தில் அருட்பணியாளா் அப்போலின் கிளாட்ராஜ் தலை... மேலும் பார்க்க

வெள்ளகவி மலைக் கிராமத்தில் ஆட்சியா் ஆய்வு

கொடைக்கானல் அருகேயுள்ள வெள்ளகவி மலைக் கிராமத்தில் வளா்ச்சிப் பணிகள் குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் சரவணன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தினாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதியில் உள்ள... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

செம்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த வீ.கூத்தம்பட்டியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (65). இவா் சொந்தமாக கட்டி வரும் ... மேலும் பார்க்க

நீட் தோ்வுக்கு எதிராக திமுக நடவடிக்கை எடுக்கவில்லை: ஹெச்.ராஜா

நீட் தோ்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவைக் கூட தாக்கல் செய்யாத திமுக, கடந்த 4 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வருவதாக ஹெச்.ராஜா குற்றஞ்சாட்டினாா். திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜ... மேலும் பார்க்க