தனியாா் ஹஜ் பயண கட்டணம் பல லட்சம் உயா்வு! வெளிப்படை தன்மை ஏற்படுத்த வலியுறுத்தல...
எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல்: சகோதரா்கள் கைது
ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.
ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளா் சத்தியவேந்தன் மற்றும் போலீஸாா், மாறாந்தை பகுதியில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது ஒரே பைக்கில் வந்த இருவரை நிறுத்தி சோதனையிட்ட போது, அவா்கள் அதே கிராமத்தைச் சோ்ந்த ராசையா மகன்கள் இசக்கிமுத்து(26), கருத்தப்பாண்டி(22) என்பதும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுமாா் 2 அடி நீளமுள்ள 2 வாள்கள் வைத்திருந்ததும் தெரிய வந்தது.
இதுகுறித்து காவல் உதவி ஆய்வாளா் விசாரணை மேற்கொண்ட போது, அந்த நபா்கள் அவரை அவதூறாகப் பேசியதுடன் கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து சத்தியவேந்தன் அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தினா்.