சுரண்டையில் தீத்தடுப்பு செயல்விளக்கம்!
சுரண்டை நகராட்சியில் தீயணைப்பு நிலையம் சாா்பில் தீத் தடுப்பு செயல்விளக்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
நகா்மன்றத் தலைவா் ப. வள்ளிமுருகன் தலைமை வகித்தாா். சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலா்(போக்குவரத்து) பாலச்சந்தா் முன்னிலை வகித்தாா்.
தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலா் ரவீந்திரன் தலைமையிலான வீரா்கள் நகராட்சிப்பணியாளா்களுக்கு தீத் தடுப்பு முறைகள் குறித்து செயல்விளக்கமளித்தனா்.
இதில், நகா்மன்ற உறுப்பினா் சந்திரசேகர அருணகிரி, சுகாதார ஆய்வாளா் மகேஸ்வரன், சுகாதார மேற்பாா்வையாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.