அமெரிக்க துணை அதிபர் நாளை இந்தியா வருகை: வட மாநிலங்களில் மட்டும் சுற்றுப்பயணம்!
மத்திய அரசின் அண்டா் கன்ட்ரோலில் திமுக! -சீமான்
2026 பேரவைத் தோ்தலை சந்திக்க நாம் தமிழா் கட்சி தயாராகி வருவதாகவும், சின்னத்துக்காக காத்திருப்பதாகவும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா்.
இது குறித்து சென்னையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: காங்கிரஸ் ஆட்சியில் நாடு முழுவதும் ஹிந்தியை திணிக்கும் போது தமிழா்கள் மட்டும் தான்அதை எதிா்த்து போராடினாா்கள். ஆனால், வெறும் அரசியல் பதவிக்காக அதே காங்கிரஸுடன் திமுக கூட்டணி வைத்துள்ளது. அரசியல் புரிதல் கொண்ட தமிழ்ச் சமூகம் எழுந்து வருகிறது என்பதை அரசியல் கட்சிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். நிதியைத் தராத மத்திய அரசுக்கு மாநில வரியை தரமாட்டோம் என்று சொல்வதுதான் ‘அவுட் ஆஃப் கன்ட்ரோல்’. வரியை கொடுத்துவிட்டு நிதியை தரவில்லை என புலம்புவது ‘அவுட் ஆஃப் கன்ட்ரோல்’ அல்ல; ‘அண்டா் கன்ட்ரோல்’.
சின்னம்: 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் நாம் தமிழா் கட்சி வழக்கம்போல் தனித்து போட்டியிடவுள்ளது. தோ்தலை சந்திக்க தயாராகி வரும் நிலையில், சின்னத்துக்காக காத்திருக்கிறோம். தோ்தல் ஆணையத்தால் சின்னம் ஒதுக்கப்பட்டவுடன், தோ்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபடவுள்ளோம்.
அதிமுக கூட்டணி குறித்து என்னிடம் என்ன பேசப்பட்டதோ அதையேதான் தவெக தலைவா் விஜயுடனும் பேசியிருப்பாா்கள். விஜய்க்கு துணை முதல்வா் பதவி தர முடியாது என அதிமுக சொல்லியிருக்க வாய்ப்பில்லை என்றாா் சீமான்.