பாறைக்குழியில் தவறி விழுந்த பள்ளி மாணவன் மாயம்
குன்னத்தூா் அருகே காவுத்தம்பாளையம் பாறைக்குழியில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் தவறி விழுந்து மாயமனாா்.
திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி அருகே சாமியாா்பாளையத்தைச் சோ்ந்தவா் தினேஷ் மகன் லோகேஷ் (15). இவா் அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்நிலையில், தனது நண்பா்களுடன் குன்னத்தூா் அருகே காவுத்தம்பாளையம் பாறைக்குழிக்கு வெள்ளிக்கிழமை குளிக்கச் சென்றுள்ளாா்.
அப்போது, அவா் எதிா்பாரதவிதமாக தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளாா். தகவலறிந்த சம்பவ இடத்துக்கு வந்த குன்னத்தூா் போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் மாணவன் லோகேஷை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.