செய்திகள் :

Retro Audio Launch: "அசால்ட் சேது கேரக்டர நான் பண்றேன்னு சொன்னேன்" - கலகலப்பாக பேசிய கருணாகரன்

post image

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள ரெட்ரோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா, பீட்சா, இறைவி படங்களில் நடித்த கருணாகரன் ரெட்ரோ திரைப்படத்தில் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

karunakaran in Retro
karunakaran in Retro

23 அரியர் இருந்தும் IPS ஆகணும்னு ஆசை

இசைவெளியீட்டு விழாவில் பேசிய கருணாகரன், "சின்ன வயசுல நான் டெல்லில படிச்சேன். அப்போ ஒரு தமிழ் படம் பார்க்கிறதுக்கு மூணு மாதம் காத்திருக்க வேண்டியதாக இருக்கும். இன்னைக்கு சூர்யா சார் படத்தில நடிக்க வாய்ப்பு கிடைச்சுருக்கு.

'காக்க காக்க' படம் காலேஜ் கட் பண்ணிட்டு போய் பார்த்திருக்கோம். எனக்கு 23 அரியர் இருந்தபோதும் அந்த படம் பாத்துட்டு ஐ.பி.எஸ் ஆகணும்னு ஆசை இருந்தது. என்னுடைய நண்பர் ஐபிஎஸ் ஆனதுக்கு சூர்யா சார்தான் இன்ஸ்பிரேஷன்.

"நானும் சந்தோஷும் ஹவுஸ் ஓனர் கிட்ட பொய் சொன்னோம்"

'ஜிகர்தண்டா' படத்தில ஆசால்ட் சேது கேரக்டருக்கு ஆள் கிடைக்கலன்னு கார்த்திக் டென்ஷனாக இருந்தாரு. அப்போ நானே போய் ' அந்தக் கேரக்டர் நானே பண்றேன்' னு சொன்னேன். என்கிட்ட கதையா படிச்சிங்களான்னு கேட்டார் கார்த்தி, நான் இல்லைன்னு சொன்னேன்.

கருணாகரன்
கருணாகரன்

இந்த விஷயம் தெரிஞ்சதாலதான் பாபி படத்துல வர்ற சீன்ஸ்ல உண்மையாகவே என்னை அடிக்க ஆரம்பிச்சுட்டாரு. ஏன்டா அசால்ட் சேது கேரக்டர கேக்குறியான்னு...

'பீட்சா' படம் முடிஞ்சதும் வாடகைக்கு வீடு எனக்கு சந்தோஷ் நாராயணன் பார்த்துக் கொடுத்தார். பரவால்ல சினிமாகாரங்களுக்கு வீடு கொடுக்கிறாங்களேன்னு சொன்னேன். அப்பதான் சந்தோஷ், "நானே DLF -ல வேலைபாக்குறதா சொல்லிருக்கேன்னு" சொன்னாரு. ஹவுஸ் ஓனர்கிட்ட ஐடி வேலை பார்க்கிறதாக சொல்ல சொன்னாரு.

அப்புறம் நாங்க கொடுத்த இன்டெர்வியூ மூலமாக ஹவுஸ் ஓனருக்கு நாங்க யார்னு தெரிஞ்சுடுச்சு. ஆனா அவருக்கும் படம் பிடிச்சதால விட்டுட்டாரு..." என கலகலப்பாக பேசினார்.

Suriya: "என் அடுத்த படத்தைத் தொடங்குகிறேன்" - கவுகாத்தி கோயிலில் சூர்யா, ஜோதிகா தரிசனம் |Photo Album

Retro: படப்பிடிப்பில் சூர்யாவுக்கு ஏற்பட்ட காயம்; "டூப் வச்சுக்கக் கூடாதா" - நாசர் பகிர்ந்த சம்பவம்சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpXசினிமா தொடர்ப... மேலும் பார்க்க

Sachein: சுனாமி; மிஸ்ஸான சந்தானம் ; பணத்துக்கு நோ சொன்ன எஸ்.ஏ.சி |Unknown Facts

ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான 'சச்சின்' திரைப்படம் இப்போது ரீ ரிலீஸ் ஆகியிருக்கிறது . படம் வெளியாகி 20 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. இப்போதும் ரீ ரிலீஸில் படத்... மேலும் பார்க்க

Na.Muthukumar: `அணிலாடும் முன்றில்' விகடன் ப்ளே ஆடியோ புக் வெளியீட்டு விழா

எல்லாக் காலங்களிலும் வாசிப்பு மிக முக்கியமான ஒன்று. அந்த வாசிப்பினை எல்லா தரப்பு மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிதான் Vikatan Play. காலத்திற்கு ஏற்ற மாற்றங்களோடு வாசிக்க சூழல் அமையாதவர்களும் கேட... மேலும் பார்க்க

Sivakarthikeyan: 'ஷெர்யர், யுகா' - வண்டலூர் பூங்காவில் சிங்கம் மற்றும் புலியைத் தத்தெடுத்த SK

சிவகார்த்திகேயன் தற்போது 'பராசக்தி' படத்தில் நடித்து வருகிறார். சுதா கொங்கரா இயக்கும் இந்தப் படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா, பாஸில் ஜோசஃப் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ... மேலும் பார்க்க

Mandaadi: "சூரி சார், உங்க சினிமா பயணம் எனக்கு இன்ஸ்பிரேஷன்" - மஹிமா நம்பியார்

நடிகர் சூரி தற்போது ‘மண்டாடி’ என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். இப்படத்தை வெற்றிமாறனின் உதவியாளர் மதிமாறன் என்பவர் இயக்குகிறார். மஹிமா நம்பியார், சத்யராஜ், அச்சுயுத் குமார் உள்ளிட்ட பலரும் ... மேலும் பார்க்க

Malavika: "ரயில் பயணத்தின்போது எனக்கு நடந்த அந்த சம்பவம்..." - நடிகை மாளவிகா மோகனன் ஓப்பன் டாக்

'Pattam Pole' என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன். தமிழில் பேட்ட, மாஸ்டர், தங்கலான் போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர். தற்போது ‘சர்தார் 2’ படத்தில... மேலும் பார்க்க