Malavika: "ரயில் பயணத்தின்போது எனக்கு நடந்த அந்த சம்பவம்..." - நடிகை மாளவிகா மோகனன் ஓப்பன் டாக்
'Pattam Pole' என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன்.
தமிழில் பேட்ட, மாஸ்டர், தங்கலான் போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர்.
தற்போது ‘சர்தார் 2’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் மும்பையில் படித்தபோது, தான் எதிர்கொண்ட மோசமான சம்பவம் ஒன்றை மாளவிகா பகிர்ந்திருக்கிறார்.

அதில், "மும்பை இப்போது பாதுகாப்பான நகரமா எனக் கேட்டால், அதற்கு இப்போதைக்குப் பாதுகாப்பான நகரம் என்றுதான் கூறுவேன்.
அதற்குக் காரணம் என்னிடம் தனியாக கார் இருக்கிறது. கார் ஓட்டுவதற்கு நான் தனியாக ஒரு டிரைவரை வேலைக்கு வைத்திருக்கிறேன்.
ஆனால், நான் கல்லூரியில் படிக்கும்போது இந்த பாதுகாப்பை உணரவில்லை. ஒரு முறை மும்பை ரயிலில் நானும் எனது நண்பர்களும் வீட்டிற்குத் திரும்பி கொண்டிருந்தோம். அப்போது எங்களைப் பார்த்து ஒருவர் தகாத முறையில் நடந்துக்கொண்டார்.

பயத்தில் நாங்கள் அப்படியே உறைந்து போய்விட்டோம். அப்போது பெட்டியில் எங்களைத் தவிர வேறு யாரும் இல்லை. ஒவ்வொரு பெண்ணுக்கும் இது போன்ற கதைகள் இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...