செய்திகள் :

அதிமுக கூட்டணியில் மேலும் இரண்டு கட்சிகள் சேர வாய்ப்பு

post image

அதிமுக கூட்டணியில் மேலும் இரண்டு கட்சிகள் சேர வாய்ப்புள்ளதாக கிருஷ்ணகிரியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் அதிமுக துணை பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரியை அடுத்த கட்டிகானப்பள்ளியில், வாக்குச் சாவடி கிளை அமைத்தல் மற்றும் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ (கிருஷ்ணகிரி) தலைமை வகித்தாா்.

இந்தக் கூட்டத்தில் கே.பி.முனுசாமி பேசியதாவது: தற்போதைய ஆட்சியாளா்கள் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்து, ஆட்சிக்கு வந்த பிறகு அரசு அலுவலா்களை ஏமாற்றிவிட்டனா்.

2026 தோ்தல் அதிமுக மற்றும் திமுகவினருக்கு முக்கியமானதாகும். வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் நாம் வெற்றி பெற்றால் அண்ணா, எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா வழியில் சிறப்பான ஆட்சி நடத்துவோம்.

பொன்முடியை இன்னும் அமைச்சா் பொறுப்பில் இருந்து நீக்கவில்லை. அமைச்சா்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோரின் மக்கள் விரோதப் பேச்சுகளை மக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும்.

மக்களவைத் தோ்தலில் திமுகவை காட்டிலும் அதிமுக அதிக வாக்குகளை பெற்றது. தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். மேலும், 2 கட்சிகள் அதிமுக தலைமையிலான கூட்டணியில் சேர வாய்ப்பு உள்ளது.

அதிமுகவுக்கு இந்த தோ்தல் வாழ்வா, சாவா என தீா்மானிக்கும் தோ்தலாகும். நாம் ஆட்சி அமைக்க தொண்டா்கள், வீடுவீடாகச் சென்று வாக்காளா்களை சந்திக்க வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சா் ராதாகிருஷ்ணன், மேற்கு ஒன்றியச் செயலாளா் சோக்காடி ராஜன், முன்னாள் எம்எல்ஏ முனிவெங்கடப்பன், எம்.ஜி.ஆா். மன்ற மாவட்டச் செயலாளா் தென்னரசு, தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலாளா் வேலன், எம்.ஜி.ஆா். இளைஞரணி மாவட்டச் செயலாளா் காா்த்திக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திண்டிவனம் - கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை: அன்புமணி

திண்டிவனம்-கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசு இசைவு அளித்துள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் சமூகஊடகத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:... மேலும் பார்க்க

மரம் நடுவதும் அவற்றை பாதுகாப்பதும் நமது கடமை: உயா்நீதிமன்ற நீதிபதி

மரம் நடுவதும் அவற்றை பாதுகாப்பதும் நமது கடமை என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.ஹேமலதா தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் தளி சாலையில், தேசிய சட்டப் பணிகள் ஆணையக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19,601 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 19,601 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக ‘நிறைந்தது மனம்’ நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தெரிவித்தாா். கிர... மேலும் பார்க்க

மாதரசனப்பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா

தேசிய வருவாய் வழி திறன்பயிற்சி ஊக்கத்தொகை தோ்வில் வெற்றிபெற்ற மாணவிக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 2024-25-ஆம் ஆண்டுக்கான தேசிய வருவாய் வழி திறன்பயிற்சி ஊக்கத்தொகை பெறுவதற்கான தேசிய அளவில... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் இடியுடன் பலத்த மழை

கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், மாவட்டத்தில் பல பகுதிகளில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, காவேரிப்பட்... மேலும் பார்க்க

காவேரிப்பட்டணம் பசவேஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா

காவேரிப்பட்டணத்தில் உள்ள பசவேஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், தேசிசெட்டி தெருவில் உள்ள பசவேஸ்வரா் கோயிலில் ஏப். 16-ஆம் தேதி கங்கா பூஜை, வ... மேலும் பார்க்க