செய்திகள் :

'அமித் ஷா போன மாநிலங்கள் எல்லாமே வெற்றிதான்; எல்லாம் அவர் பார்த்துப்பார்' - நயினார் நாகேந்திரன்

post image

கோவை காளப்பட்டி தனியார் மண்டபத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அந்தக் கட்சியினர் சார்பில் வரவேற்பு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன், “கூட்டணி, எத்தனை சீட் என்பதைப் பற்றி யாரும்  கவலைப்பட வேண்டாம்.

நயினார் நாகேந்திரன்

தேசிய தலைமை பார்த்துக் கொள்ளும்!

அது குறித்து யாரும் சமூகவலைதளங்களில் பதிவிட வேண்டாம். அதை தேசிய தலைமை பார்த்துக் கொள்ளும். திமுகவிடம் இருந்து பாஜக தொண்டர்களை பாதுகாப்பது தான் என்னுடைய வேலை. சீட் பற்றி எல்லாம் அமித்ஷா பார்த்துக் கொள்வார்.

பொதுவாக சட்டசபையில் நான் அமைதியாக பேசுவேன். ஆனால் வானதியின் பேச்சு திமுகவினர் அலறும் வகையில் இருக்கும். அவர் பேசினாலே அமைச்சர்கள் அலர்ட் ஆகிவிடுவார்கள். நம்முடைய செல்போன்களை எல்லாம் ஆளும்கட்சியினர் டேப் செய்கின்றனர். அவர்கள் நம் நடவடிக்கைகளை கண்காணிக்கிறார்கள். எனவே  எச்சரிக்கையாக பேசுவது நல்லது.

அமித்ஷா
அமித்ஷா

அமித்ஷா  ஒரே நாளில் எல்லா வேலையையும் முடித்து விட்டார். அமித்ஷா, ‘நான் அடிக்கடி தமிழகம் வருகிறேன். நான் பார்த்துக் கொள்கிறேன்.’ என சொல்லியுள்ளார். அதனால் நாம் நம்முடைய பூத்களில் வேலைகளை பார்த்தால் போதும். இரட்டை இலையோடு அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களுடன் சட்டமன்றம் செல்வோம்.

இதற்கு முன்பு அமித்ஷா போன மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. இப்போது அவர் தமிழகத்துக்கு வந்துள்ளார். அதிமுகவினருடன் இணைந்து ஒன்றாக பயணிக்க வேண்டும். நமது கூட்டணி கட்சி ஆளும் கட்சியாக வர வேண்டும். இனியொரு முறை திமுக ஆட்சிக்கு வந்தால் நம்மை பாதுகாக்க முடியாது.

அண்ணா அறிவாலயம்

மக்கள் விரோத ஆட்சியை திமுக நடத்தி வருகிறது. மக்களிடம் அதிருப்தி நிலவி வருகிறது. எனக்கு முன்பு அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் கட்சியை வலுப்படுத்தி உள்ளனர்.  தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு ஒவ்வொரு தொண்டரும் பாடுபட வேண்டும்.” என்றார்.

Stalin: "திமுக கூட்டணியில் பாமக இணைகிறதா?" - கூட்டணி குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன?

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்குப் பேட்டி அளித்திருக்கிறார்.அந்த பேட்டியில், 'பா.ம.க, தி.மு.க கூட்டணியில் இணைய வாய்ப்பு இருக்கிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இது உண்மையா?' என்று ... மேலும் பார்க்க

மதிமுக: "மல்லை சத்யா மட்டும் தலைவர் வைகோவுக்கு சேனாதிபதி இல்லை" - வெடிக்கும் துரை வைகோ

ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக திருச்சி எம்.பி.,யும் வைகோவின் மகனுமான துரை வைகோ அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. துரை வைகோவுக்கும், கட்சியின் தல... மேலும் பார்க்க

கோவையில் நயினார் நாகேந்திரனுக்கு வரவேற்பு; அண்ணாமலை மிஸ்ஸிங் டு மேடையில் வெளியான அறிவிப்பு!

பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கோவை மண்டல பாஜக சார்பில் வரவேற்பு கூட்டம் நடத்தப்பட்டது. நயினார் வருவதற்... மேலும் பார்க்க

'கூட்டணி வேறு... கொள்கை வேறு; வக்பு சட்டத்துக்கு எதிராக வாக்களித்துள்ளோம்' - வேலுமணி

கோவை அதிமுக சார்பில் நீட் தேர்வால் உயிரிழந்த 22 மாணவ, மாணவிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமண க... மேலும் பார்க்க

'அண்ணாமலை, புதிய எழுச்சியை கொடுத்தவர்' - நயினார் வரவேற்பு நிகழ்வில் வானதி சீனிவாசன்

பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரன் கோவை வருகை புரிந்தார். அவருக்கு கோவை பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெ... மேலும் பார்க்க

`இறந்து' விட்டதாக இறுதிச்சடங்குக்கு ஏற்பாடு; ஆம்புலன்ஸில் திடீரென அசைந்த உடல்... என்ன நடந்தது?

விழுப்புரம் மாவட்டம், தோகைபாடியை சேர்ந்தவர் பிரகாஷ். மிகுந்த உடல் நலக்குறைகளுடன் புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். 10 நாள்களாகத் தீவிர சிகிச்சை பெற்று ... மேலும் பார்க்க