KKR : 'ஸ்ரேயஸ் ஐயரை ஏலத்துல விட்டதுக்கு இதுதான் காரணம்' - கொல்கத்தா சிஇஓ விளக்கம...
மதிமுக: "மல்லை சத்யா மட்டும் தலைவர் வைகோவுக்கு சேனாதிபதி இல்லை" - வெடிக்கும் துரை வைகோ
ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக திருச்சி எம்.பி.,யும் வைகோவின் மகனுமான துரை வைகோ அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
துரை வைகோவுக்கும், கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையே ஏற்படும் கருத்து மோதல்களால்தான் தாமாகவே விலகுகிறார் துரை வைகோ என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று ம.தி.மு.க நிர்வாகக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் துரை வைகோ கலந்துகொண்டிருக்கிறார்.
நிர்வாகக்குழுக் கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய துறை வைகோ, “வைகோதான் ம.தி.மு.க, ம.தி.மு.க-தான் வைகோ. கட்சிப் பொறுப்பில் இருந்து நான் விலகுவது யாருக்கும் தெரியாது. நானே எடுத்த முடிவுதான் இது.
என்னால் கட்சிக்கு எந்தப் பிரச்னையும் வரக்கூடாது. அவதூறுகள் வரைக்கூடாது என்றுதான் பொறுப்பில் இருந்து விலகினேன். கட்சியை இழிவுப்படுத்தக்கூடாது என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்.
நான் விரும்பி இந்த அரசியலுக்கு வரவில்லை. கட்சிக் கேட்டுக்கொண்டதால்தான் வந்தேன் ” என்றிருக்கிறார்.
'வைகோவின் சேனாதிபதி நான்' என்று மல்லை சத்யா அறிக்கை வெளியிட்டிருப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த துரை வைகோ, ”வைகோவுக்கு மல்லை சத்யா மட்டும் சேனாதிபதியில்லை. கட்சியில் இருக்கும் அத்தனை பேரும் தலைவருக்கு சேனாதிபதிகள்தான். இன்று சுமுக முடிவைக் கட்சியின் நிர்வாகக் குழுவே எடுக்கும்” என்று கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb