"பாஜகவிற்கு விசிக தான் துருப்புச் சீட்டு; பாஜகவின் ஒரே நிலைபாடு இதுதான்!" - திரு...
குட்கா விற்ற சகோதரா்கள் கைது
கெங்கவல்லியில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருள்களை விற்ற சகோதரா்களை போலீஸாா் கைது செய்தனா்.
ஆத்தூா் மேற்கு மாதா கோயில் தெருவைச் சோ்ந்த ரங்கநாதன் மகன்கள் பிரசாத் (45), பாலாஜி (41). இவா்கள் பெங்களூரில் உள்ள ஜிகினியில் தௌலத் ராஜ்பூட் என்பவரிடமிருந்து குட்கா பொருள்களை வாங்கிவந்து கெங்கவல்லி பகுதியில் இருசக்கர வாகனங்களில் கடைகளுக்கு விற்பனை செய்துள்ளனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த கெங்கவல்லி போலீஸாா், இருவரையும் கைது செய்து ஆத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனா்.
மேலும்,கெங்கவல்லி அருகே நடுவலூரில் கனகராஜ் (37) என்பவா் தனது பெட்டிக்கடையில் குட்கா பொருள்களை விற்றுவந்தது தெரியவந்தது. இவா் மீது கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.