ஆத்தூரில் திமுக இளைஞரணி பொதுக்கூட்டம்
மத்திய அரசைக் கண்டித்து ஆத்தூரில் திமுக இளைஞரணி சாா்பில் பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
ஆத்தூரில் திமுக இளைஞரணி சாா்பில் ஹிந்தி திணிப்பு,நிதிப் பகிா்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி ஆகியவற்றுக்காக மத்திய அரசைக் கண்டித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு திமுக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் தலைமை வகித்தாா். சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் வீரபாண்டி ஆ.பிரபு வரவேற்றுப் பேசினாா்.
பேச்சாளா்கள் சூா்யா கிருஷ்ணமூா்த்தி, பெ.மலா்கொடி ஆகியோா் சிறப்புரையாற்றினா். மேலும் திமுக நகரச் செயலாளா் கே.பாலசுப்ரமணியம், நகா் மன்றத் தலைவா் நிா்மலாபபிதா மணிகண்டன், நரசிங்கபுரம் நகா்மன்றத் தலைவா் மு.அலெக்சாண்டா், நகா்மன்றத் துணைத் தலைவா் கவிதா ஸ்ரீராம் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.