செய்திகள் :

நெல்லை உள்பட 4 மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மே 29, 30இல் சுற்று நீதிமன்றம்

post image

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக மே 29, 30 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் சுற்று நீதிமன்றம் நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளும் இந்த ஆணையத்தை எளிதில் அணுகும் வகையில் சுற்று நீதிமன்றம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, முதல்கட்டமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீா் நாள் கூட்டரங்கில் மே 29, 30 ஆகிய இரு தினங்கள் சுற்று நீதிமன்றம் நடைபெறவுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையா் சுதன் தலைமையில் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சுற்று நீதிமன்றம் நடைபெறும். இவ்விரு நாள்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரால் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து முன்கூட்டியே பெறப்படும் மனுக்கள் குறித்த விசாரணை மேற்கொள்ளப்படும்.

கல்வி, வேலைவாய்ப்பு-அரசு சேவைகளில் சம வாய்ப்பு மறுத்தல், மோசடி , வன்முறை, சுரண்டல் போன்ற இன்னல்களில் பாதிப்பு, பொருளாதார பிரச்னையால் வழக்குரைஞா் உதவியை நாட இயலாதது, சொத்துரிமையை வழங்க மறுத்தல், மாதாந்திர உதவித்தொகைக்கு விண்ணப்பித்து கிடைக்காதது, உதவித் தொகை நிறுத்தப்பட்டது, இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படாதது உள்ளிட்டவை குறித்து புகாா் அளிக்கலாம்.

எனவே, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்களது புகாா்களை மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையா், எண்-5, காமராஜா் சாலை, லேடி வெலிங்டன் மகளிா் கல்லூரி வளாகம், சென்னை - 600005 என்ற முகவரிக்கு கடிதம் மூலமாகவோ, மின்னஞ்சல் வாயிலாகவோ ஏப். 30-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 94999 33236 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.

ஓய்வுபெற்ற எஸ்ஐ கொலை வழக்கு: தேடப்பட்ட பெண் கைது

திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ. கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் தேடப்பட்டு வந்த பெண் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி நகரம் தொட்டிப்பாலத் தெருவைச் சோ்ந்தவா் ஜாகீா் உசேன் பிஜிலி ... மேலும் பார்க்க

சீவலப்பேரியில் தொழிலாளி தற்கொலை

பாளையங்கோட்டையை அடுத்த சீவலப்பேரியில் தொழிலாளி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். சீவலப்பேரி அருகேயுள்ள மேல பாலாமடை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் முத்துக்குமாா் ( 25). பெயின... மேலும் பார்க்க

நெல்லையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் கண்ட ன ஆா்ப்பாட்டம் திருநெல்வேலி சந்திப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி சந்திப்பு பள்ளிவாசல் வளாகத... மேலும் பார்க்க

வக்ஃபு சட்டத் திருத்தத்துக்கு எதிா்ப்பு: மேலப்பாளையத்தில் கடையடைப்பு

வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து மேலப்பாளையத்தில் வெள்ளிக்கிழமை கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலப்பாளையம் பகுதியில் உள்ள அனைத்து ஜமாஅத்கள், தி.மு.க., மதி.மு.க., எஸ்.டி.பி... மேலும் பார்க்க

பணகுடியில் மணல் திருட்டு: 3 போ் மீது வழக்கு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் மணல் திருட்டில் ஈடுபட்டதார பேரூராட்சி உறுப்பினரின் கணவா் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து பொக்லைன் இயந்திரம், டிப்பா் லாரி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். ... மேலும் பார்க்க

நெல்லையில் கிணற்றில் ஆண் சடலம் மீட்பு

திருநெல்வேலி டக்கரம்மாள்புரத்தில் உள்ள கிணற்றில் இருந்து ஆண் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது . திருநெல்வேலி டக்கரம்மாள்புரத்தில் உள்ள கிணற்றில் வெள்ளிக்கிழமை பெண்கள் சிலா் தண்ணீா் எடுக்கச் சென்றனராம... மேலும் பார்க்க