நொய்டாவில் மதுபோதையில் மனைவியின் விரலைக் கடித்து துண்டித்த நபர் கைது
வக்ஃபு சட்டத் திருத்தத்துக்கு எதிா்ப்பு: மேலப்பாளையத்தில் கடையடைப்பு
வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து மேலப்பாளையத்தில் வெள்ளிக்கிழமை கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலப்பாளையம் பகுதியில் உள்ள அனைத்து ஜமாஅத்கள், தி.மு.க., மதி.மு.க., எஸ்.டி.பி.ஐ., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், த.மு.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் இணைந்து வெள்ளிக்கிழமை ஒரு நாள் 24 மணி நேர கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனா்.
அதன்படி, சுமாா் 1500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. பாலகங்கள், மருந்தகங்கள் மட்டும் வழக்கம்போல் செயல்பட்டன. போராட்டத்தால் சந்தை ரவுண்டானா முக்கு பகுதிகள், பஜாா் வீதிகள், அண்ணா வீதி, நேதாஜி சாலை, கொட்டிகுளம் பஜாா், ஜின்னாதிடல் பஜாா் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
ஆட்டோ, காா் உள்ளிட்ட வாடகை வாகனங்களும் இயங்கவில்லை. சுமாா் 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஓடாததால் மருத்துவமனை, அரசு அலுவலகங்கள் செல்லும் மக்கள் பெரிதும் பாதிப்படைந்தனா். கடையடைப்பு போராட்டம் காரணமாக மேலப்பாளையம் நகரின் முக்கிய வீதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.