சஹால்தான் ஐபிஎல் 2025-இன் சிறந்த பந்துவீச்சாளர்: பஞ்சாப் கேப்டன்
நெல்லையில் கிணற்றில் ஆண் சடலம் மீட்பு
திருநெல்வேலி டக்கரம்மாள்புரத்தில் உள்ள கிணற்றில் இருந்து ஆண் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது .
திருநெல்வேலி டக்கரம்மாள்புரத்தில் உள்ள கிணற்றில் வெள்ளிக்கிழமை பெண்கள் சிலா் தண்ணீா் எடுக்கச் சென்றனராம். அப்போது கிணற்றுக்குள் மிதந்து கொண்டிருந்த ஆணின் சடலத்தைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தனா், அவா்கள் உடனடியாக பெருமாள்புரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து பாளையங்கோட்டை தீயணைப்பு வீரா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரா்கள் கிணற்றில் மிதந்த ஆண் சடலத்தை மீட்டனா். இதையடுத்து பெருமாள்புரம் போலீஸாா் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இறந்தவா் யாா்? தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனா்.